முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்கதேசத்தில் நிலச்சரிவு: 26 பேர் பலி

செவ்வாய்க்கிழமை, 13 ஜூன் 2017      உலகம்
Image Unavailable

'டாக்கா : வங்கதேசத்தில் கடுமையான மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 26 பேர் பலியாகினர்.

இதுகுறித்து நேற்று  வங்கதேச போலீஸார் தரப்பில் கூறியதாவது , "வங்கதேசத்தின் தென்கிழக்கு பகுதியில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்ந்து வருகிறது. இதில் அங்காங்கே நிலச்சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன. இதில் ரங்காமத் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மீட்புப் பணி வீரர்கள் உட்பட 21 பேர் பலியாகினர். பந்தர்மன் மாவட்டத்தில் 5 பேர் பலியாகினர்" என்று கூறப்பட்டுள்ளது.

நிலச்சரிவு ஏற்பட்டுள்ள இடங்களில் மீட்புப் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன என்று வங்கதேச தேசிய பேரிடர் துறை தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து