திருப்பதி கோயில் வளாகத்தில் 6 மாத குழந்தை கடத்தல்

புதன்கிழமை, 14 ஜூன் 2017      ஆன்மிகம்
tirupati 2017 04 14

திருப்பதி, புகழ்பெற்ற திருப்பதி வெங்கடாசலபதி கோயில் வளாகத்தில் பக்தர்கள் தூங்கிக்கொண்டியிருந்தபோது 9 மாத குழந்தையை யாரோ கடத்திச்சென்றுவிட்டனர்.

திருப்பதி வெங்கடாசலபதியை தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்காண பக்தர்கள் வந்து செல்கின்றனர். சாமி தரிசனத்திற்கு பல நாட்களாகுவதால் கோயில் வளாகத்தில் பக்தர்கள் இரவு நேரத்தில் தூங்குவது வழக்கம். மேலும் வெகுதூரத்தில் இருந்து வருபவர்கள் அங்கு ஒரு நாளே அல்லது 2 நாட்களோ தங்கிச்செல்வது வழக்கம்.  தம்பதியினர் இருவர் சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்புகையில்  நேரமாகிவிட்டதால் இரவு நேரத்தில்  கோயில் வளாகத்தில் தங்களுடைய 4 பிள்ளைகளுடன் தூங்கிக்கொண்டியிருந்தனர். இந்த பிள்ளைகளில் 9 மாத குழந்தையும் அடங்கும். இவர்கள் அனைவரும் அயர்ந்து  தூங்கும்போது அந்த 4 பிள்ளைகளில் 9 வயது குழந்தையை யாரோ தூக்கிச்சென்றுவிட்டனர். விழித்துப்பார்த்தபோது 9 மாத குழந்தையை காணாததால் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதன்பேரில் யார் தூக்கிச்சென்றிருக்கலாம் என்பதை அறிய சி.சி.டி.வி. கேமிராவை போலீசார் பார்த்தனர். அப்போது மற்றொரு தம்பதியினர் அந்த குழந்தையை தூக்கிச்செல்வது தெரியவந்தது.

உடனே  அந்த குழந்தையின் படம் மற்றும் அதை தூக்கிச்செல்பவர்களின் உருவம் குறித்த படங்களை ஊடகங்களுக்கு கொடுத்ததோடு சமூக வளைதலங்களிலும் வெளியிட்டனர். மேலும் அவர்களை பிடிக்க தேடுதல் வேட்டையிலும் போலீசார் தீவிரமாக இறங்கியுள்ளனர்.  இதேமாதிரி கடந்த ஜனவரி மாதம் ஒரு தம்பதியினரிடம் இருந்து 4 வயது சிறுமியை ஒருவர் கடத்தி சென்றுவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் அந்த சிறுமியை தெலுங்கானானவில் உள்ள மெகபூப்நகரில் ஒரு பஸ்சில் இருந்து அந்த சிறுமியை போலீசார் மீட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து