முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாமக்கல் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகின் சார்பில் ரத்ததான விழிப்புணர்வு பேரணி: கலெக்டர் மு.ஆசியா மரியம் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

புதன்கிழமை, 14 ஜூன் 2017      கிருஷ்ணகிரி
Image Unavailable

ஆண்டுதோறும் ஐPன் திங்கள் 14-ஆம் நாள் உலக இரத்த கொடையாளர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு நாமக்கல் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகின் சார்பில் உலக இரத்த கொடையாளர்கள் தினம் இந்த ஆண்டில் "இரத்ததானம் செய்வோம்’ உடனே செய்வோம்’ மீண்டும் மீண்டும் செய்வோம்" என்ற வாசகத்தை முக்கிய குறிக்கோளாக் கொண்டு உலக இரத்த கொடையாளர் தினம் கொண்டாடப்பட்டது.

 

உலக இரத்த கொடையாளர் தினம்

 

இதனை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் இரத்ததானம் செய்வோரின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் விதமாகவும் மக்களிடையே இரத்ததானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் "இரத்ததானம் செய்வோம்’ உடனே செய்வோம்’ மீண்டும் மீண்டும் செய்வோம்" என்பதை வலியுறுத்தி உலக இரத்ததான தின விழிப்புணர்வு பேரணி நாமக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் கலெக்டர் மு.ஆசியா மரியம் இ.ஆ.ப அவர்களால் இன்று (14.06.2017) கொடியசைத்து துவக்கி வைக்கப்பட்டது. இப்பேரணியானது மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை வளாகத்தில் தொடங்கி மோகனூர் சாலை, அண்ணாசிலை, பேருந்து நிலையம், திருச்சி சாலை வழியாக நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தை வந்தடைந்தது.

இப்பேரணியில் விவேகானந்தா செவிலியர் பயிற்சிக்கல்லூரி, பி.ஜி.பி.செவிலியர் பயிற்சிக்கல்லூரி மாணவியர்கள், நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இரத்ததானம் செய்வதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பதாதைகளை ஏந்திச்சென்றனர்.

இவ்விழிப்புணர்வு பேரணியில் நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் ம.ராஜசேகரன், நாமக்கல் வருவாய் வட்டாட்சியர் ராஜகோபால், இணை இயக்குநர் (மருத்துவபணிகள்) மரு.சரஸ்வதி, துணை இயக்குநர் (காசநோய்) மரு.கணபதி, துணை இயக்குநர் (தொழுநோய்) மரு.ஜெயந்தினி, மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு.செல்வகுமார், உதவி இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) நக்கீரன், மாவட்ட திட்ட மேலாளர்;, கார்த்திக்கேயன், மாவட்ட மேற்பார்வையாளர், திருநாவுக்கரசு, ரெட்;கிராஸ் ஒருங்கிணைப்பாளர் ராஜேஸ் கண்ணன், இரத்த வங்கி, ஏ.ஆர்.டி மருத்துவ அலுவலர்கள் மற்றும் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகின் பணியாளர்களும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பிரநிதிகள், மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து