முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடவூர் வட்டத்தில் நடைபெற்ற ஜமாபந்தி இரண்டாம் நாள் நிகழ்ச்சி : கலெக்டர் கு.கோவிந்தராஜ் 481 மனுக்கள் பெற்று நடவடிக்கை

வியாழக்கிழமை, 15 ஜூன் 2017      கரூர்
Image Unavailable

கரூர் மாவட்டத்தில் உள்ள வருவாய் வட்டங்களில் 1426ஆம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) கிராம வாரியாக கணக்கு முடிப்பு நிகழ்ச்சி நேற்று 14.06.2017 தொடங்கி நடைப்பெற்று வருகிறது. இரண்டாம் நாளானது நேற்று 15.06.2017 கடவூர் வட்டத்திற்கு வருவாய் நிர்வாகத் தீர்வாயம் நடத்தும் அலுவலரான மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் ஜமாபந்தியில் பங்கேற்று பொதுமக்களிடமிருந்து 481 மனுக்களைப் பெற்று உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டார்.

முதியோர் உதவித்தொகை

இந்நிகழ்சியில் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது பட்டா மாறுதல் முக்கிய சான்றுகள் பெறுதல் நில தொடர்பான தகவல்கள் பெறுதல் முதியோர் உதவித் தொகைப் பெறுதல் காப்பீட்டு திட்ட பயன்படுதல் உள்ளிட்டவைகள் குறித்து பொதுமக்கள் மனுக்களை வழங்கி பயன் பெறக்கூடிய மற்றும் கிராம கணக்குகள் சரிபார்ப்பு நிகழ்ச்சிகளான ஜமாபந்தி நிகழ்ச்சி மாவட்ட முழுவதும் நடைபெற்று வருகிறது.

கடவூர் வட்டத்தில் இரண்டாம் நாளான இன்று மைலம்பட்டி குறுவட்ட பாப்பயம்பாடி, வடவம்பாடி, பண்ணப்பட்டி, வரவணை, மஞ்சாநாயக்கன்பட்டி, காளையாபட்டி, மேலப்பகுதி, தேவர்மலை ஆகிய கிராமங்களுக்கு நடைபெற்றது. இக்கிராமங்களை சேர்ந்த பொதுமக்களிடமிருந்து 190 பெறப்பட்டது. பெறப்படும் தகுதியான மனுக்களுக்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்தார். முன்னதாக நில அளவைத் தொடர்பான சங்கிலிகள் மற்றும் நேர்கோணல் கட்டைகள் அளவீடுகளை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்நிகழ்ச்சியில் நில அளவை பிரிவு உதவி இயக்குநர் ரவீந்தரன், மாவட்ட மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் தன்ராஜ், கனிமவள உதவி இயக்குனர் வேடியப்பன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில் மாவட்ட கலெக்டர் அலுவலக மேலாளர் (பொது) உதயகுமார், வேளாண் உதவி இயக்குனர் கந்தசாமி, வட்டாட்சியர் முருகன், வரி ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உட்பட அனைத்து அரசுத் துறை அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து