முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பனாமா பேப்பர்ஸ்’ ஊழல் வழக்கு தொடர்பாக பாக். பிரதமர் ஷெரீபின் சகோதரரிடம் விசாரணை

ஞாயிற்றுக்கிழமை, 18 ஜூன் 2017      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத் : பனாமா பேப்பர்ஸ்’ ஊழல் வழக்கு தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபின் சகோதரரும் பஞ்சாப் மாகாண முதல்வருமான ஷாபாஸ் ஷெரீப், கூட்டு விசாரணைக் குழு முன்பு ஆஜரானார்.

கடந்த 2016-ம் ஆண்டில் வெளியான ‘பனாமா பேப்பர்ஸ்’ பட்டியலில் நவாஸ் ஷெரீப் அவரது குடும்பத்தினர் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. அதன்படி 1990-களில் நவாஸ் பிரதமராக இருந்தபோது வெளிநாடுகளில் சட்டவிரோத பணப் பரிமாற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கூட்டு விசாரணைக் குழு விசாரித்து வருகிறது. கடந்த 15-ம் தேதி பிரதமர் நவாஸ் ஷெரீப் கூட்டு விசாரணைக் குழு முன்பு ஆஜரானார். அவரிடம் 3 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து நவாஸின் சகோதரரும் பஞ்சாப் மாகாண முதல்வருமான ஷாபாஸ் ஷெரீப் கூட்டு விசாரணைக் குழு முன்பு நேற்று ஆஜரானார். அவரிடம் 2 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடைபெற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து