நெல்லை மாவட்டத்தில் வேகமாக வீசும் காற்றால் காற்றாலை மின் உற்பத்தி உயர்ந்து வருகிறது

ஞாயிற்றுக்கிழமை, 18 ஜூன் 2017      தமிழகம்
windmills 2017 6 18

நெல்லை :  நெல்லையில் வெயிலின் தாக்கம் இருந்த போதிலும் காற்று நன்றாக வீசுவருகிறது. இதனால் காற்றாலை மின் உற்பத்தி உயர்ந்து வருகிறது.

நெல்லை மாவட்டத்தில் தற்போது குற்றால சீசன் காலம் ஆகும். பருவமழை போக்கு காட்டி வருகிறது. இருப்பினும் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் காற்றாலை மின் உற்பத்தி நன்றாக உள்ளது. மாலை நிலவரப்படி காற்றாலை மின் உற்பத்தி 3856 மெகா வாட் அளவில் உயர்ந்தது.

தமிழகத்திற்கு தற்போது 15 ஆயிரம் மெகா வாட் மின்சாரம் தேவைப்படு்ம் நிலையில் மின் வாரியம் காற்றாலை மின்சாரத்தை 2 ஆயிரம் மெகா வாட் அளவிலேயே கொள்முதல் செய்கிறது. உற்பத்தியாகும் மொத்த மின்சாரத்தையும் அதிகாரிகள் கொள்முதல் செய்ய வேண்டும் என காற்றாலை உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


7000 மெகாவாட் மின் உற்பத்தி

தமிழகத்தில் சுமார் 11 ஆயிரம் காற்றாலைகள் மூலம் அதிகபட்சமாக 7 ஆயிரம் மெகா வாட் வரை மின் உற்பத்தி செய்ய முடியும். தற்போது காற்றின் வேகம் காரணமாக சராசரியாக 3 ஆயிரம் மெகாவாட் வரை காற்றாலை மின்சாரம் கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து