கோவில்பட்டியில் வாஞ்சிநாதன் படதிறப்புவிழா: அமைச்சர் கடம்பூர்ராஜூ பங்கேற்பு

திங்கட்கிழமை, 19 ஜூன் 2017      தூத்துக்குடி
minister kadambur raju open vanjinathan photo 2017 06 19

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் முன்பு காயத்திரி திருமண மண்டபத்தில் இந்திய கலாச்சார நட்புறவு கழகம் சார்பில் வாஞ்சிநாதன் நினைவுநாள் விழா நடந்தது. 

 பட திறப்பு விழா

நகரசெயலாளர் நம். சீனிவாசன் தலைமை வகித்தார். காயத்திரி வித்யாலயா தலைவர் நாகராஜன், செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய கலாச்சார நட்புறவு கழகம் நகரசெயலாளர் ஆம்ஸ்ட்ராங் வரவேற்றார். இதில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ சிறப்புறையாற்றினார்.  நிகழ்ச்சியில் அதிமுக பெருநகர செயலாளர் விஜயபாண்டியன், ஜனசக்தி பொருப்பாசிரியர் இந்திரஜித், எழுத்தாளர் இளசைமணியன், புனிதஓம் கல்வி நிறுவனர் இலட்சுமணபெருமாள், திருவள்ளுவர்மன்ற தலைவர் கருத்தபாண்டியன், மாநில செயலாளர் தமிழரசன், பாலமுருகன், இலக்கியஉலா ரவீந்தர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து