முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கானில் அமெரிக்க ராணுவ தளத்தில் துப்பாக்கிச் சூடு: 8 அதிகாரிகள் பலி

செவ்வாய்க்கிழமை, 20 ஜூன் 2017      உலகம்
Image Unavailable

காபூல் : ஆப்கானிலுள்ள பர்வான் மாகாணத்திலுள்ள அமெரிக்க ராணுவ தளத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அந்நாட்டைச் சேர்ந்த 8 பாதுகாப்பு அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.

இதுகுறித்து பர்வான் மாகாண கவர்னரின் செய்தித் தொடர்பாளர் கூறியபோது, "ஆப்கானிஸ்தானில் பர்வான் மாகாணத்திலுள்ள அமெரிக்க ராணூவ தளத்தில் நேற்று  மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பாதுகாப்பு அதிகாரிகள் 8 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் சிலர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது” என்றார்.

ஆப்கானிஸ்தானிலுள்ள அமெரிக்க ராணுவ தளங்களில் தாலிபன்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் இத்தாக்குதலையும் தாலிபன்கள்தான் நடத்தியிருப்பர் என்று ஆப்கன் போலீஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து