முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீதிபதி கர்ணன் கொல்கத்தா சிறையில் அடைக்கப்பட்டார்

புதன்கிழமை, 21 ஜூன் 2017      இந்தியா
Image Unavailable

கொல்கத்தா, தலைமறைவாக இருந்த கொல்கத்தா ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி கர்ணன் நேற்று கொல்கத்தா சிறையில் அடைக்கப்பட்டார்.

கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் முன்னாள் நீதிபதி  கர்ணனுக்கு சுப்ரீம்கோர்ட்டு 6 மாத சிறை தண்டனை விதித்தது. ஆனால் கர்ணன் தலைமறைவாகிவிட்டார். அவரை பிடிப்பதற்காக மேற்கு வங்க போலீசார் தமிழகத்திற்கு வந்தனர். தமிழகத்தில் பல நாட்களாக தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதனையொட்டி அவர்கள், தமிழக போலீசார் உதவியை நாடினர். தமிழக போலீசார் கர்ணன் இருக்கும் இடத்தை கண்டுபிடித்தனர். கர்ணன் தனது உறவினர்களுக்கு தொலைபேசி மூலம் தொடர்புகொண்டதை வைத்து அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்தனர்.

கோவையில் இருந்து சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மலுமிச்சம்பட்டி என்ற இடத்தில் கர்ணன் மறைந்திருப்பது தெரியவந்தது. அதை கொல்கத்தாக போலீசாரிடம் தமிழக போலீசார் தெரிவித்தனர். இதை வைத்து  மேற்குவங்க போலீசார் அங்கு சென்று கர்ணனை பிடித்து கைது செய்தனர். அவரை கைது செய்து இரவோடு இரவாக சென்னைக்கு விமானம் மூலம் கொண்டுவரப்பட்டு பின்னர் சென்னையில் இருந்து விமானம் மூலம் கொல்கத்தா கொண்டு செல்லப்பட்டார். அங்கு கர்ணனுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் உடனடியாக சிறையில் அடைக்கப்பட்டார்.

நாட்டில் ஒரு ஐகோர்ட்டு நீதிபதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவது இதுவே முதல் தடவையாகும். 1983-ம் ஆண்டு தமிழ்நாடு பார் கவுன்சிலில் கர்ணன் தன்னுடைய பெயரை பதிவு செய்தார். பின்னர் மெட்ராஸ் ஐகோர்ட்டு நீதிபதியாக கடந்த 2009-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.  கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் 11-ம் தேதி கொல்கத்தா ஐகோர்ட்டுக்கு மாற்றம் செய்யப்பட்டார். கடந்த 12-ம் தேதி கர்ணன் ஒரு குற்றவாளியாக ஓய்வுபெற்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து