முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய பிரதமர் மோடி உண்மையான நண்பர் - அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 25 ஜூன் 2017      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : மோடி அமெரிக்கா போய் சேர்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு அவரை ‘உண்மையான நண்பர்’ என்று டிரம்ப் அறிவித்துள்ளார்.

தனது டிவீட் பதிவில் “இந்தியப் பிரதமர் மோடியை வரவேற்கும் சமயத்தை எதிர்நோக்குகிறேன். உண்மையான நண்பரான அவரிடம் பல ராஜதந்திர விஷயங்கள் குறித்து விவாதிக்கவுள்ளேன்” என்றார்.

பலமுறை  பிரதமர் மோடியும்,  அதிபர் டிரம்பும் தொலைபேசியில் பேசியிருந்தாலும் நேரில் சந்திப்பது இதுவே முதல்முறையாகும்.

பிரதமர் மோடி தனது டிவீட்டில் “அமெரிக்காவுடனான இந்தியாவின் கூட்டணி பலதரப்பட்ட விஷயங்களையும், பன்முகத்தன்மையையும் கொண்டதாகும். அரசு மட்டுமின்றி பலவிதமான பங்கேற்பாளர்கள் உள்ளனர்” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து