முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாம்பன்,ராமேசுவரம் கடல் பகுதியில் பலத்த சூறாவளி: மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல அனுமதி மறுப்பு

திங்கட்கிழமை, 26 ஜூன் 2017      ராமநாதபுரம்
Image Unavailable

    ராமேசுவரம்,ஜூன்,27: ராமேசுவரம்,பாம்பன் கடல் பகுதியில் பலத்த சூறாவளி வீசி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்வதற்கு மீன்துறை அதிகாரிகள் அனுமதி மறுக்கப்பட்டதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் படகுகளை கடலில் பாதுகாப்பாக நிறுத்தயுள்ளனர்.
   பாம்பன்,ராமேசுவரம், ஆகிய  பகுதியிலிருந்து 1200 க்கும் மேற்பட்ட விசைப் படகுகளும்,2000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டு படகுகளும் உள்ளது. இதில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் விசைப்படகுகளில் சுழற்ச்சி முறையில் வாரத்தில் 3 நாட்களும்,நாட்டுபடகு மீனவர்கள் வாரத்தில் 6 நாட்களும் மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதால் இந்த கடல் பகுதிகளில் நேற்று காலையில் முதல் பலத்த சூறாவளி  காற்று வீசி வருகிறது.இதனால் பாதுகாப்பு கறுதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராமேசுவரம் மீன்துறை அதிகாரிகள் இப்பகுதிகளிலுள்ள மீனவர்கள் மீன்பிடிக்க செல்லக்கூடாது என அறிவிக்கப்பட்டு,மீன்பிடிக்க செல்வதற்கான அனுமதி சீட்டு திங்கள் கிழமை வழங்காமல்  மறுத்து விட்டனர்.பின்னர் மீனவர்கள் படகுகளை கடலில் நங்கூரமிட்டு பாதுகாப்பாக நிறுத்தவும் அறிவுறுத்தினர்.இதனால் இப்பகுதிகளிலுள்ள படகுகளை  கடலில் நங்கூரமிட்டு நிறுத்தும் பணியில் ஈடுபட்டு   மீனவர்கள் கண்காணித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து