முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீவிரவாதிகள் மிரட்டல் எதிரொலி: நாளை தொடங்கும் அமர்நாத் யாத்திரை பாதுகாப்புக்கு 22 ஆயிரம் ராணுவத்தினர் குவிப்பு

செவ்வாய்க்கிழமை, 27 ஜூன் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : அமர்நாத் யாத்திரைக்கு வரும் பக்தர்களை கொல்ல தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை விடுத்த எச்சரிக்கையால், மத்திய உள்துறை 22 ஆயிரம் பாதுகாப்பு படை வீரர்களை உடனடியாக குவித்துள்ளது. நாளை தொடங்கும் அமர்நாத் யாத்திரையில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் யாத்திரை மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர்.

பனிலிங்க தரிசனம்

காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகையில் உள்ள பனி லிங்கத்தை தரிசனம் செய்ய ஆண்டுதோறும் பக்தர்கள் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் யாத்திரை செல்வது வழக்கமாக உள்ளது. இந்த ஆண்டுக்கான அமர்நாத் பக்தர்கள் யாத்திரை நாளை தொடங்க உள்ளது. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அமர்நாத் யாத்திரை பயணம் மேற்கொள்ள இந்த ஆண்டு முன்பதிவு செய்துள்ளனர். ஆனால் முன்பதிவும் செய்யாமல் பக்தர்கள் அமர்நாத் யாத்திரைக்கு வருவார்கள். எனவே இந்த ஆண்டு 2 லட்சம் முதல் 3 லட்சம் பக்தர்கள் வரை வருவார்கள் என்று எதிர்பார்க்கிறார்கள்.

தீவிரவாதிகள் சதி

இது பாதுகாப்பு படை வீரர்களிடம் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே இந்த ஆண்டு அமர்நாத் பக்தர்களை குறிவைத்து தாக்குதல் நடத்த வேண்டும் என்று தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டி இருப்பதை உளவுத்துறை கண்டுபிடித்து எச்சரித்துள்ளது. 150 யாத்ரீகர்களையாவது கொன்று விட வேண்டும் என்று தீவிரவாதிகள் பேசிக் கொண்டது உளவுத்துறையினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாதுகாப்பு அதிகரிப்பு

தீவிரவாதிகளின் இந்த அச்சுறுத்தலைத் தொடர்ந்து அமர்நாத் யாத்திரை பக்தர்களுக்கு பாதுகாப்பை அதிகரிக்க மத்திய உள்துறை உத்தரவிட்டுள்ளது. அதன் பேரில் அமர்நாத் யாத்திரை வழித்தடத்தில் இப்போதே 22 ஆயிரம் பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். பக்தர்கள் தங்கி செல்லும் பகுதிகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு வருகிறது. அதோடு பக்தர்கள் எத்தகைய முன்னெச்சரிக்கையுடன் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

22 ஆயிரம் வீரர்கள் ...

22 ஆயிரம் பாதுகாப்புப் படை வீரர்கள் தவிர காஷ்மீர் மாநில உள்ளூர் போலீசாரும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள். அவர்கள் யாத்திரை பாதையை ஆள் இல்லா குட்டி விமானம் மூலம் கண்காணிக்க திட்டமிட்டுள்ளனர். இதுதவிர அமர்நாத் யாத்திரை பாதையில் தினமும் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மத்திய உள்துறை அமைச்சகம் சிறப்புக் குழு ஒன்றை காஷ்மீர் மாநிலத்துக்கு அனுப்பி வைத்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து