அரக்கோணம் ரோட்டரி சங்கம் சார்பில் ரத்ததானம் முகாம்

ஞாயிற்றுக்கிழமை, 2 ஜூலை 2017      வேலூர்

நூற்றுகணக்கான பாலிடெக்னிக் மாணவர்கள் பங்குகொண்ட அரக்கோணம் ரோட்டரி; சங்கத்தினரின் ரத்த தானம் முகாம் நேற்று முன் தினம் சிறப்புடன் நடந்தேறியது. இது குறித்து விவரம் வருமாறு. வேலூ}ர் மாவட்டம், அரக்கோணம் நகர எல்லையில் கிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி அமைந்திருக்கிறது.

முகாம்

 இந்த கல்லூரியில் சனிக்கிழமையன்று வேலூர் நாராயணி பீட மருத்துவ குழுவினர், மற்றும் கிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி நூற்றுக்கணக்கான மாணவர்களுடன் (ரோ.மா 3231) அரக்கோணம் ரோட்டரி சங்கத்தின் பிரமாண்ட ரத்த தானம் முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு சங்கத்தின் 2017-18 புதிய தலைவரும், ஸ்ரீ மஹாலட்சுமி டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளருமான பி.இளங்கோ தலைமை தாங்கினார்


சமூக பணிகள் இயக்குனரும், ஸ்ரீமுருகன் பார்மஸி உரிமையாளருமான ஆர்.வெங்கட்டரமணன், மற்றும் கல்லூரி செயலாளர் டி.எஸ்.ரவிக்குமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் தனசேகரன வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக கல்லூரி தலைவர் டாக்டர் டிஆர்.சுப்பிரமணியம் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்து பேசினார். சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் தலைவர்கள் ஜி.மணி, கேபிகே.பிரபாகரன், எழுத்தறிவு இயக்குனர் அருணா.வடிவேலன், அரக்கோணம் டைம்ஸ் சீனிவாசன், அருள் பேட்டரி குணசீலன், மற்றும் அங்கத்தினர்களான கேபிள் டிவி பா.கெஜபதி, சுலைமான், மகேஷ்குமார், ஆகியோரும்கல்லூரி இயக்குனர் சாம்பார்மூர்த்தி, பாலிடெக்னிக் முதல்வர் செந்தில்குமார், திட்ட அலுவலர் ராஜசேகர், உள்ளிட்டோர்களும் கலந்து கொண்டனர் நூற்றுகணக்கான பாலிடெக்னிக் மாணவர்கள் ஆர்வத்துடன் தங்கள் ரத்தங்களை தானமாக வழங்கினார்கள்.

அப்பொழுது நாராயணி பீட மருத்துவவர் ரமேஷ் மற்றும் 18 பேர் கொண்ட குழுவினர்; மாணவர்களின்; உடல் பரிசோதனைகளுடன்; ரத்தம் சேகரிப்பில் முழுமையாக ஈடுபட்டனர்;. வேலூர் நாராயணி பீட மருத்துவ குழு ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் இறுதியில் அனைவருக்கும் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து