கடலூர் மாவட்டத்தில் தமிழக அரசின் 100 நாள் சாதனைகள் மலர் அமைச்சர் எம்.சி. சம்பத் வெளியிட்டார்

ஞாயிற்றுக்கிழமை, 2 ஜூலை 2017      கடலூர்
100 days achievement  2017 07 02

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து தமிழக அரசின் 100 நாள் சாதனைகள் மலரினை  தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் வெளியிட மாவட்ட கலெக்டர் டி.பி.ராஜேஷ்,  பெற்றுக்கொண்டார்.

 100 நாள் சாதனை

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் நடைபெற்றுவரும்  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசின் 100 நாள் சாதனை மலரில் கடலூர் மாவட்டத்தில் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வேளாண்மைத்துறை,நெடுஞ்சாலைத்துறை, கூட்டுறவுத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, சமூக நலத்துறை, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை, காவல்துறை, பொதுப்பணித்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, எரிசக்தி, தகவல் தொழில்நுட்பம், செய்தி மக்கள் தொடர்புத்துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, முன்னாள் படைவீரர் நலன் ஆகிய துறைகளில் தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து செயல்படுத்தப்பட்ட விவரங்களை தொகுத்து தமிழக அரசின் 100 சாதனை மலராக தயாரித்து வெளியிடப்பட்டுள்ளது.

பலர் பங்கேற்பு

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.விஜயா, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) எம்.எஸ்.கோவிந்தன், மாவட்ட ஆட்சித்தலைவரின்  நேர்முக உதவியாளர்(பொது) ஜெ.சண்முகம், மாவட்ட வழங்கல் அலுவலர் தினேஷ், மாவட்ட பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர்  நல அலுவலர் இராமு, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மதிவாணன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வை.ரவிச்சந்திரன் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள்  ஆகியோர் கலந்து கொண்டனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து