முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாம்பனில் மீனவர்கள் வலையில் சிக்கிய அணில் முகம் தோற்றத்துடன் கூடிய அபூர்வ மீன்.

வெள்ளிக்கிழமை, 7 ஜூலை 2017      ராமநாதபுரம்
Image Unavailable

 ராமேசுவரம்,ஜூலை,8:   பாம்பன்  பகுதியிலிருந்து மீன்பிடிக்க சென்று வெள்ளிக்கிழமை கரை திரும்பிய விசைப்படகு மீனவர் ஒருவரின் மீன்பிடி வலையில் அணில் முகம் தோற்றத்துடன் கூடிய அபூர்வ மீன் ஒன்று சிக்கியிருந்தது.
  பாம்பன் பகுதியிலிருந்து வியாழக்கிழமை காலையில் 100 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மன்னார் வளைகுடா கடல் பகுதி்க்கு மீன்பிடிக்க சென்றனர்.இவர்கள் ஆழ்கடலில் மீன்களை பிடித்துக்கொண்டு வெள்ளிக்கிழமை காலையில் கரை திரும்பி வந்தனர்.இதில் மீனவர் ஒருவர்  வலையில் அணில் முகம் தோற்றத்துடன் கூடிய அபூர்வ மீன் ஒன்று சிக்கிருந்தது.இந்த மீனை  மீனவர்கள் படகிலிருந்து கரைக்கு கொண்டு  வந்தனர்.பின்னர் இந்த மீன் அணில் போன்ற அழகான முகத்தோற்றிலும்.8 அடி நீளத்திலும்,40 கிலோ எடையளவுடன் அபூர்வமாக இருந்ததால் மீனவர்கள் ஆச்சரியத்துடன் பார்வையிட்டனர்.மேலும் இந்த மீன் இப்பகுதியில் முதல் முறையாகவும்  மீனவர்கள் வலையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த மீனை வெளி நாடுகளுக்கு உணவுக்காக 1 கிலோ ரூபாய்  100 என பேசி, மொத்தமாக  ரூபாய் 4 ஆயிரத்துக்கு விலைக்கு  வியாபாரிகள் மீனவர்களிடமிருந்து  வாங்கி சென்றனர்.இதனால் மீனை பிடி்தது வந்த மீனவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து