ராமேசுவரம் திருக்கோயிலில் ஆடித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

திங்கட்கிழமை, 17 ஜூலை 2017      ராமநாதபுரம்
rmstemple  news 0

ராமேசுவரம்,-  ராமேசுவரம்  திருக்கோயிலில் ஆடித்திருவிழா பர்வதவர்த்தினி அம்மன் சன்னதி முன்பு அமைந்துள்ள தங்க முலாம் பூசப்பட்ட கொடிமரத்தில்  கொடியேற்றத்துடன் நேற்று  தொடங்கியது

  ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் தொடர்ந்து 17 நாள்கள் நடைபெறும் ஆடித்திருவிழா  நேற்று தொடங்கியது. திருவிழாவின் தொடக்க நிகழ்ச்சியை முன்னிட்டு ஞாயிற்றுக் கிழமை இரவு  திருக்கல்யாண மண்டபத்தில் வாஸ்து சாந்தி பூஜைகள் நடத்தப்பட்டு தொடர்ந்து  கணபதி ஹோமம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.பின்னர்  தொடர்ந்து தி்ங்கள்கிழமை  காலையில் ராமநாதசுவாமி,பர்வதவர்த்தினஇ அம்மன் சன்னதியில் சிறப்பு பூஜைகளும்,தீபாராதணையும் நடைபெற்றது.பின்னர் தொடர்ந்து சன்னதியிலிருந்து பர்வதவர்த்தினி அம்மன் அலங்காரத்துடன்  புறப்பாடகி நவசக்தி மண்டபத்திற்கு எழுந்தருளின.இதையடுத்து  நவசக்தி மண்டபத்தில்  அமைக்கப்பட்டுள்ள  தங்க முலாம் பூசப்பட்ட கொடிமரத்துக்கு பூஜையில் வைக்கப்பட்ட புனித நீரால் அபிஷேகங்கள் நடைபெற்றது.பின்னர் திருக்கோயில் குருக்கள் ஸ்ரீராம் தலைமையில் கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு காலை  10.20 மணிக்கு திருவிழா தொடக்கத்திற்கான  கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.பின்னர் பர்வதவர்த்தினி அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும்,தீபாராதனையும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் திருக்கோயில் இணை ஆணையர் மங்கையர்கரசி,உதவி ஆணையர் பாலகிருஷ்ணன்,திருக்கோயில்  கண்காணிப்பாளர்கள் ககாரின்ராஜ்,ராஜாங்கம்,பாலசுப்பிரமணியன் ஆலய பேஷ்கார்கள், அண்ணாத்துரை,கலைச்செல்வம்,இணை ஆணையரின் நேர்முக உதவியாளர் கமலநாதன்,  ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் பாரிராஜன்,இந்து மக்கள் கட்சியின் ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் பிரபாகரன்,பா.ஜ.கட்சியின் மாவட்ட தலைவர் முரளிதரன்,யாத்திரைப்பணியாளர் சங்க நிர்வாகிகள் மற்றும் பக்தர்களும்,பொதுமக்களும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து