இன்று தமிழக சட்டசபை மீண்டும் கூடுகிறது

திங்கட்கிழமை, 17 ஜூலை 2017      தமிழகம்
TN assembly 2017 07 01

சென்னை : மூன்று நாட்கள் விடுமுறைக்கு பின்னர் தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது.

தமிழக சட்டசபையில் மானியக் கோரிக்கைகளுக்கான கூட்டத்தொடர் கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி கூடியது. வனத்துறை முதல் செய்தி மற்றும் விளம்பரத்துறை, இந்து அறநிலையத்துறை வரையிலான மானியக்கோரிக்கைகள் நிறைவடைந்தன. இதைத்தொடர்ந்து அரசு விடுமுறைகள் மற்றும் ஜனாதிபதி தேர்தலுக்காக நேற்று வரை மூன்று நாட்கள் விடுமுறை விடப்பட்டது.

நாளை பொதுத்துறை ...


இந்த நிலையில் இன்று மீண்டும் சட்டசபை கூடுகிறது. இன்று காலை 10 மணிக்கு கேள்விநேரம் முடிந்த பின்னர், ஆதிதிராவிடர் நலத்துறை மானியக்கோரிக்கையை அமைச்சர் ராஜலட்சுமி தாக்கல் செய்து விவாதங்களுக்கு பதிலளிக்கிறார். மேலும் ஆதிதிராவிட மக்களுக்கான புதிய அறிவிப்புகளையும் அமைச்சர் வெளியிடுகிறார். இதைத்தொடர்ந்து நாளை பொதுத்துறை, சட்டமன்றங்கள், நிதித்துறை மானியக்கோரிக்கை விவாதம் மற்றும் அறிவிப்புகளுடன் சட்டசபை கூட்டம் நிறைவடைகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து