முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்சி மாநகராட்சியில் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை சரியாக தரம் பிரித்து வழங்கிய மூன்று பேருக்கு தங்க நாணயம் வழங்கப்பட்டது

புதன்கிழமை, 19 ஜூலை 2017      திருச்சி

திருச்சி மாநகராட்சியில்  100 சதவீதம் குப்பைகளை தரம் பிரித்து சேகரிக்கும் பொதுமக்களை ஊக்குவிக்கும் விதமாக ஒவ¦வொருவாரமும் ஒருகிராம் தங்¦கம் நாணயம் பரிசாக வழங்¦கும்         திட்டம் கடந்த 5ம் தேதி முதல் துவக்கப்பட்டது.  இன்று 19.07.2017 மக்கும் மற்றும் மக்காத  குப்பைகளை   வீடகளிருந்து பிரித்து கொடுத்த மூன்று நபர்களை கணினி மூலம் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட 16வது வார்டு  நீத்துகார தெருவை சோந்த   ராஜேஸ்வரி, 18வது வார்டு சின்னசெட்டிதெரு சரவணன் மற்றும் 8வது வார்டு  ராஜாமணி ஆகியோருக்கு  தலா 1 கிராம் தங்கநாணயம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் உதவிசெயற்பொறியாளர்கள்  கண்ணன் குமரேசன் ஆகியோர்முன்னிலையில்   கொடைக்கானல் நகராட்சி ஆணையர்  சரவணன், கூடலூர் நகராட்சி ஆணையர்  சத்தியநாதன் கம்பம் நகராட்சி ஆணையர்  சங்கரன் சின்னமனூர் நகராட்சி ஆணையர்  கமலா  ஆகியோர் வழங்கினார்கள.    பொதுமக்கள் தங்களது வீடுகளில் உற்பத்தியாகும் மக்காத கழிவுகளை அந்த வாரம் முழுவதும் தனியே சேகரித்து வைத்து புதன்கிழமையன்று மட்டும் வீடுதேடி வரும் மாநகராட்சி பணியாளரிடம் நேரில் முறையாக ஒப்படைக்கப்பட வேண்டும். மக்காத குப்பைகளை புதன்கிழமையன்று மாநகராட்சி பணியாளரிடம் ஒப்படைப்பதை பொதுமக்களே தங்களது  அலைபேசி  மூலம் தெளிவாக புகைப்படங்¦கள் எடுத்து அதனை  8489444400   என¦ற திருச்சிராப்பள்ளி   மாநகராட்சி  வாட்ஸஆப் -க்கு  அனுப்ப வேண்டும்.  புகைப்படங்கள் அனுப்பும்போது தங்களது முகவரி மற்றும் அலைபேசி எண் தவறாமல்குறிப்பிடப்பட வேண்டும்.ஒவ¦வொரு புதன்கிழமையன்று காலை 6.00மணி முதல¦ மதியம் 1.00 மணிக்குள்  மட்டுமே திருச்சிராப்பள்ளி மாநகராட்சி வாட்ஸஆப்-க்கு புகைபடங்கள் அனுப்பப்பட வேண்டும்.   இதர நாட்களிலோ இதர நேரங்களிலோ அனுப்பப்படும் புகைப்படங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. திடக்கழிவுகளை தரம் பிரித்து வழங்குவதை பொதுமக்களுக்கு ஊக்கப்படுத்தும் நோக்கில் ஒவ்வொரு புதன்கிழமையன்றும் தொடர்ந்து இதே முறையில் அதிர்ஷ்டசாலி நபருக்கு தங்க நாணயம் ஊக்க பரிசாக வழங்கப்படும்.   திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பகுதிகளுக்குட்பட்ட அனைத்து பொதுமக்களும், வணிகர்களும்  தங்க நாணயம் வழங்கும் திட்டத்தில்  முழு ஈடுபாட்டுடன் கலந்து கொண்டு மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஆணையர் கேட்டுக்கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து