முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் நடந்த உலக ‘ரோபோ’ போட்டி: இந்திய மாணவர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை

வியாழக்கிழமை, 20 ஜூலை 2017      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : அமெரிக்காவில் நடந்த முதலாவது உலகளாவிய ‘ரோபோ’ போட்டியில் இந்திய மாணவர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.

157 நாடுகள் ...

அமெரிக்காவில் வாஷிங்டன் நகரில் முதலாவது உலகளாவிய ‘ரோபாட்டிக்ஸ்’ போட்டி (ரோபோ என்னும் எந்திர மனிதர்களை அடிப்படையாக வைத்து நடத்தப்படுகிற போட்டி) நடந்தது. இந்தப் போட்டியில் இந்தியா உள்ளிட்ட 157 நாடுகள் கலந்துகொண்டன.

ராகேஷ் தலைமை ...

மும்பையை சேர்ந்த மாணவர்கள், தங்கப்பதக்கத்துடன் கூடிய ஜாங் ஹெங் என்ஜினீயரிங் டிசைன் விருதினை வென்று சாதனை படைத்தனர். உலகளாவிய சவால் மேட்ச் பிரிவில் வெண்கலமும் வென்றார்கள். இந்த இந்திய அணிக்கு 15 வயதேயான ராகேஷ் தலைமை தாங்கியது குறிப்பிடத்தக்கது. அணியில் மிகவும் இளையவர் இவர்தான். இந்த அணியில் ஆதிவ் ஷா, ஹார்ஷ் பட், வாட்சின், ஆதிய்யன், தேஜாஸ், ராகவ் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

நிச்சயம் மகிழ்ச்சி ...

இந்த வெற்றி குறித்து அணியினர் தங்களது ‘பேஸ்புக்’ பக்கத்தில், ‘‘நாங்கள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற முடிந்ததில் நிச்சயம் மகிழ்ச்சி அடைந்துள்ளோம். முதல் குளோபல் சவால்–2017–ல் நாங்கள் மிகவும் சந்தோ‌ஷப்பட்டோம்’’ என கூறி உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து