முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராம்நாத் கோவிந்த்துக்கு கிடைத்த ஓட்டுகள்

வியாழக்கிழமை, 20 ஜூலை 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றுள்ள ராம்நாத் கோவிந்த்துக்கு மொத்தம் 7 லட்சத்து 2 ஆயிரத்து 44 ஓட்டுக்கள் கிடைத்துள்ளன. அவரை எதிர்த்து போட்டியிட்ட மீராகுமாருக்கு 3 லட்சத்து 67 ஆயிரத்து 314 ஓட்டுக்கள் கிடைத்துள்ளன. அதாவது மொத்த ஓட்டுகளில் 65 சதவீதத்தை ராம்நாத் கோவிந்த் பெற்று வெற்றிபெற்றுள்ளார்.

71 வயதாகும் ராம்நாத் கோவிந்த், நாட்டின் 14-வது ஜனாதிபதியாக பதவி ஏற்கிறார். அவருக்கு 2 ஆயிரத்து 930 எம்.பி.க்களும் எம்.எல்.ஏ.க்களும் வாக்களித்துள்ளனர். இதன் மொத்த மதிப்பு 7 லட்சத்து 2 ஆயிரத்து 44. மீராகுமாருக்கு ஆயிரத்து 844 எம்.பி.க்களும் எம்.எல்.ஏ.க்களும் வாக்களித்துள்ளனர். இதன் மொத்த மதிப்பு 3 லட்சத்து 67 ஆயிரத்து 314 ஆகும்.

ஒரு எம்.பி.யின் ஓட்டுமதிப்பு 708 ஆகும். எம்.எல்.ஏ.க்களின் ஓட்டுமதிப்பு அந்தெந்த மாநில மக்கள் தொகைக்கு ஏற்ப மாறுபடும். பல மாநிலங்களில் கட்சி மாறி ராம்நாத் கோவிந்த்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். 4 ஆயிரத்து 896 எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இதில் 4 ஆயிரத்து 120 எம்.எல்.ஏ.க்களும் 776 எம்.பி.க்களும் உள்ளனர். இவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். இவர்கள்தான் ஜனாதிபதி தேர்தலில் ஓட்டளித்துள்ளனர். நியமன எம்.பி.க்களும்,எம்.எல்.ஏ.க்களும் மற்றும் மாநிலங்களில் உள்ள மேல்சபை உறுப்பினர்களும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க தகுதியற்றவர்களாவர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து