முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிம்லா பேருந்து விபத்து பலி எண்ணிக்கை 28 ஆக உயர்வு - பிரதமர் மோடி இரங்கல்

வியாழக்கிழமை, 20 ஜூலை 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : சிம்லா பேருந்து விபத்தில் பலியான 28 பேரின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

கட்டுப்பாட்டை இழந்த ...

இமாசலப்பிரதேசம் மாநிலத்தின் கின்னார் பகுதியில் இருந்து சோலன் பகுதியை நோக்கி நேற்று காலை பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. பேருந்தில் ஏராளமானோர் பயணம் செய்து கொண்டிருந்தனர்.  ராம்புர் அருகே வரும்போது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்தது. இதில் பேருந்தில் பயணம் செய்த 20 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.

28 ஆக உயர்வு ...

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு மீட்பு படையினர் விரைந்து சென்றனர். பலியானவர்களின் உடல்களை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலி எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 9 பயணிகள் படுகாயம் அடைந்துள்ளனர் என மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் இரங்கல்

இதற்கிடையே, சிம்லாவில் நடைபெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு  பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடைய பிரார்த்திக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார். அதேபோல், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், இமாசலப்பிரதேச மாநில கவர்னர் ஆசார்ய தேவ் மற்றும் முதல்வர் வீரபத்ர சிங் ஆகியோரும் விபத்தில் இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து