முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா, சீனா, பாகிஸ்தானில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு

சனிக்கிழமை, 22 ஜூலை 2017      உலகம்
Image Unavailable

Source: provided

நியூயார்க் :  இந்தியா, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட 10 நாடுகளில் எச்.ஐ.வி தொற்று அதிகரித்து வருகிறது என்று ஐ.நா. சபை கவலை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஐ.நா. வெளி யிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது:  ஆசிய - பசிபிக் பிராந்தியத்தில் எச்.ஐ.வி தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக இந்தியா, சீனா, இந்தோனேசியா, பாகிஸ்தான், வியட்நாம், மியான்மர், பாபுவா நியூ கினி, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, மலேசியா ஆகிய 10 நாடுகளில் எச்.ஐ.வி தொற்று அதிகமாக உள்ளது. ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் புதிதாக எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டவர்களில் 95 சதவீதம் பேர் இந்த 10 நாடுகளைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.

பாலியல் தொழிலாளர்கள், தன்பாலின உறவாளர்கள், போதை ஊசி பயன்படுத்துவோர் மூலம் எச்.ஐ.வி வேகமாகப் பரவி வருகிறது. கடந்த 2010 புள்ளி விவரத்தின்படி ஆசிய-பசிபிக் பிராந் தியத்தில் எச்.ஐ.வி வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.1 லட்சமாக இருந்தது. கடந்த 2016-ல் இந்த எண்ணிக்கை 2.7 லட்சமாக குறைந்துள்ளது.

எச்.ஐ.வி பாதிப்பு குறித்து இந்தியாவின் 26 நகரங்களில் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. அதில் 41 சதவீத எச்.ஐ.வி நோயாளிகள், தங்களின் நோயின் தீவிரம் எந்த அளவில் உள்ளது என்பதை அறிந்து வைத்துள்ளனர். இந்திய எச்.ஐ.வி நோயாளிகளில் 83 சதவீதம் பேருக்கு முறையாக மருத்துவ சிகிச்சை கிடைக்கிறது. 52 சதவீதம் பேர் உயர் சிகிச்சை பெறுகின்றனர். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து