முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடலாடி ஒன்றிய அரசு பள்ளிகளில் கலெக்டர் முனைவர் நடராஜன் திடீர் ஆய்வு

வெள்ளிக்கிழமை, 4 ஆகஸ்ட் 2017      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,-ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசு பள்ளிகளில் கலெக்டர் முனைவர் நடராஜன் நேரில் ஆய்வு செய்தார்.
     ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஊராட்சி ஒன்றியம், ஏர்வாடியில் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. மாவட்ட கலெக்டர் முனைவர் நடராஜன் இப்பள்ளிக்கு நேரடியாகச் சென்று, மாணவ, மாணவியர்களின் வருகைப் பதிவேடு, தேர்வு நோட்டுகள், மதிப்பெண் பதிவேடு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார். 
 மாணாக்கர்களின் வளர்ச்சியில் ஆசிரியர்களின் பங்கு இன்றியமையாதது எனவும், மாணர்க்கர்களுக்கு தொடர்ந்து தேர்வுகள் நடத்தி, தேர்வுத்தாள்களை உடனுக்குடன் திருத்தி மதிப்பெண்களை வழங்கிட வேண்டும் எனவும் ஆசிரியர்களிடத்தில் அறிவுரை வழங்கினார்.  மேலும் தேர்வுத்தாள்களை மாணாக்கர்களின் பெற்றோர்களிடத்தில் காண்பித்து கையொப்பம் பெறச் செய்திட வேண்டும் என அறிவுறுத்தினார்.  இதுதவிர எதிர்வரும் மழைக்காலத்தில் வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாணாக்கர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும் எனவும் ஆசிரியர்களிடத்தில் அறிவுரை வழங்கினார்.
 அதேவேளையில் தமிழ்நாடு அரசு பள்ளி செல்லும் குழந்தைகளின் நலனுக்காக பல்வேறு மாணவர் நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றது எனவும், மாணவ, மாணவியர்கள் கல்வி கற்கும் வயதில் கவனத்தை சிதற விடாமல் ஒழுக்கத்துடன் கூடிய கல்வியினை கற்று சமுதாயத்தில் உயர்ந்த நிலையினை அடைந்திட வேண்டும் என மாணாக்கர்களுக்கு அறிவுரை வழங்கினார். அதன்பிறகு ஏர்வாடி அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வரும் சத்துணவு திட்ட சமையல் அறைக்கு மாவட்ட கலெக்டர் நேரடியாக சென்று மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.  மேலும் சமையல் அறையில் இருப்பு வைக்கப்பட்டுள்ள உணவுப் பொருள்களின் பதிவேடுகள் குறித்தும், மாணாக்கர்களின் வருகைப் பதிவேடு குறித்தும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 
 அதனைத் தொடர்ந்து, கடலாடி ஊராட்சி ஒன்றியம், இதம்பாடல் கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி மற்றும் இதம்பாடல் அங்கன்வாடி மையம் ஆகியவற்றிற்கும் கலெக்;டர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வுகளின் போது  மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க.முனுசாமி உடனிருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து