சென்னை வரும் அமித்ஷா ரஜினியை சந்திக்கிறார்

திங்கட்கிழமை, 7 ஆகஸ்ட் 2017      அரசியல்
amit shah-rajini kanth 2017 5 24

சென்னை, பா.ஜனதா தலைவர் அமித்ஷா வருகிற 22-ந்தேதி தமிழகம் வருகிறார். சென்னை பயணத்தின் போது நடிகர் ரஜினியை சந்திக்க அமித்ஷா திட்டமிட்டுள்ளார்.

பா.ஜனதா தலைவர் அமித்ஷா வருகிற 22-ந்தேதி தமிழகம் வருகிறார். சென்னை மற்றும் கோவையில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் செய்கிறார். தமிழகத்தில் பா.ஜனதாவுக்கு பெரிய அளவில் செல்வாக்கு இல்லை. தற்போது ஜெயலலிதா மறைவால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை சாதகமாக்கி பா.ஜனதாவை வளர்ப்பதற்கான வியூகங்களை அமித்ஷா வகுத்துள்ளார். அதன் அடிப்படையில் கட்சி வளர்ச்சிக்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றி நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசிக்கவும், தமிழக மக்கள் மன நிலையை அறிந்து கொள்ளவும் அமித்ஷா திட்டமிட்டுள்ளார். எனவே தனது சுற்றுப்பயணத்தின்போது கட்சி நிர்வாகிகள் மட்டுமில்லாமல் பல முக்கிய பிரமுகர்களையும் சந்திக்க முடிவு செய்துள்ளார்.

சென்னை பயணத்தின் போது நடிகர் ரஜினியை சந்திக்கவும் அமித்ஷா திட்டமிட்டுள்ளார். ஏற்கனவே ரஜினிக்கும், பா.ஜனதா தலைவர்களுக்கும் இடையே நெருங்கிய நட்பு இருக்கிறது. பிரதமர் மோடி கட்சி நிகழ்ச்சிக்கு வந்தபோதும், பிரதமர் ஆன பிறகும் சென்னை வந்தபோது ரஜினியை சந்திக்க தவறவில்லை. அவருடனான நட்பை பலப்படுத்துவதில் பா.ஜனதா தொடர்ந்து தீவிர கவனம் செலுத்தி வருகிறது. சமீபத்தில் ரஜினியின் அரசியல் விமர்சனம் அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நீண்ட நாட்களாக ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்று அவரது ரசிகர்கள் வற்புறுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் ரஜினியின் அதிரடி அறிவிப்புகள் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது. ஆனாலும் ரஜினி இன்னும் அரசியலுக்கு வருவது பற்றியோ, தனிக்கட்சியா? மற்ற கட்சிகளுக்கு ஆதரவா? என்று வெளிப்படையாக எதுவும் சொல்லவில்லை. இந்த நிலையில்தான் அமித்ஷா-ரஜினி சந்திப்பு நடக்கிறது. ரஜினி பா.ஜனதாவுக்கு வந்தால் கட்சி பலம் பெறும் என்று நம்புகின்றனர். எனவே இந்த சந்திப்பின் போது ரஜினியின் ஆதரவை அமித்ஷா கோருவார் என்று கூறப்படுகிறது

Ispade Rajavum Idhaya Raaniyum Movie Public Review | FDFS | Harish Kalyan, Shilpa Manjunath

Ispade rajavum idhaya raniyum Movie Review | Harish Kalyan | Shilpa Manjunat | Ranjit Jeyakodi

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து