குமரி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் தலைமையில் நடைபெற்றது

திங்கட்கிழமை, 7 ஆகஸ்ட் 2017      கன்னியாகுமரி
kanyakumari collector 2017 08 07

கன்னியாகுமரி கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் தலைமையில், பொது மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் அலுவலக லூயி பிரெயிலி கூட்டரங்கில் நடைபெற்றது.

குறை தீர்க்கும் நாள் கூட்டம்

 திங்கட்கிழமை தோறும்; கலெக்டர் தலைமையில் நடைபெறும் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு குறைகள் தீர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன், நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 2015-16-ம் ஆண்டிற்கு, கொடிநாள் வசூல் ரூ.49,09,000- (ரூபாய் நாற்பத்து ஒன்பது இலட்சத்து ஒன்பதாயிரம்) இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. கன்னியாகுமரி கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் அவர்களின் கடும் முயற்சியினால், நிர்ணயம் செய்த இலக்கைவிட கூடுதலாக ரூ.16,86,000- (ரூபாய் பதினாறு இலட்சத்து எண்பத்து ஆறாயிரம்) அதாவது, ரூ.65,95,000- வசூல் செய்தமைக்காக, மாவட்ட ஆட்சித்தலைவர் சஜ்ஜன்சிங் ரா.சவான் அவர்களுக்கு, மேதகு தமிழ்நாடு ஆளுநர் , மேற்கொண்ட பணிகளை பாராட்டி, நற்சான்றுகளை கலெக்டர் அலுவலக லூயி பிரெயிலி கூட்டரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சோ. இளங்கோ, கலெக்டர் அவர்களின் நேர்முக உதவியாளர் (நிலம்) சி. நடராஜன், உதவி இயக்குநர் மாவட்ட முன்னாள் படைவீரர் நலத்துறை ந.ராஜேந்திரன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து