முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா ராணுவம் வலுவாக உள்ளது: பார்லி.யில் ராணுவ அமைச்சர் உறுதி

புதன்கிழமை, 9 ஆகஸ்ட் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, இந்தியாவின் பாதுகாப்புக்கு சவால் ஏற்பட்டால் அதை சந்திக்கும் அளவுக்கு ராணுவம் வலுவாக உள்ளது என்று மத்திய நிதி மற்றும் ராணுவ அமைச்சர் அருண்ஜெட்லி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்தியாவின் மாநிலமான சிக்கிமில் உள்ள டோக்லம் பகுதியில் வழிமறித்து சாலை அமைக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளது. இதை இந்தியா தடுத்து வருகிறது. இதனால் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே பதட்டமான சூழ்நிலை உள்ளது. இருநாட்டு ராணுவத்தினரும் நேருக்கு நேர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் வெள்ளையனே வெளியேறு இயக்கம் மகாத்மா காந்தியால் தொடங்கப்பட்டு நேற்றுடன் 75 ஆண்டுகளாகின்றன. இது தொடர்பான விவாதத்தை ராஜ்ய சபையில் நேற்று நிதி மற்றும் ராணுவ அமைச்சர் அருண்ஜெட்லி தொடங்கிவைத்து பேசினார். அப்போது அவர் கூறுகையில் கடந்த 1962-ம் ஆண்டு இந்தியா கற்றுக்கொண்ட பாடத்தையொட்டி நாட்டிற்கு வரும் எந்த சவாலையும் சமாளிக்கும் அளவுக்கு நமது ராணுவம் வலுவாக உள்ளது. சவால்கள் வந்தபோதெல்லாம் நமது ராணுவம் பலம் வாய்ந்தவையாக இருந்திருக்கிறது என்றார். கடந்த 1948-ம் ஆண்டு காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்துள்ளது. அதையும் மீட்க இந்திய மக்கள் மிகவும் விருப்பமாக இருக்கின்றனர் என்றும் அருண்ஜெட்லி கூறினார்.

மகாத்மா காந்தி 1942-ம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு என்ற இயக்கத்தை தொடங்கி இன்றுடன் (நேற்று) 75 ஆண்டுகளாகின்றன. அதற்கு பின்பு இந்தியாவுக்கு ஏற்பட்ட சவால்களின்போது அவைகளை சமாளித்து  இந்தியா பலமானதாகவே இருக்கிறது என்பது நிரூபிக்கப்பட்டு உள்ளது என்பதை பெருமையுடன் நான் கூறிக்கொள்கிறேன். கடந்த 1962-ம் ஆண்டு சீனா பழகிக்கொண்டே இந்தியா மீது படையெடுத்தது. அதிலிருந்து பாடம் கற்றுக்கொண்ட நாம்,ராணுவத்தை பலமானதாக்கிக்கொண்டு வருகிறோம். தற்போதும் அண்டை நாடுகளால் நமக்கு பெரும் சவால்கள் ஏற்பட்டுள்ளன என்று அருண்ஜெட்லி கூறினார்.

கடந்த 1962-ம் ஆண்டு ராணுவம் இருந்ததைவிட 1965 மற்றும் 1971-ம் ஆண்டுகளில் ஏற்பட்ட போரின்போது இந்திய ராணுவம் பலம் வாய்ந்ததாக உள்ளது என்பதை நிரூபிக்கப்பட்டுள்ளது. கடந்த 1962-ம் ஆண்டு இந்தியா மீது சீனா போரை திணித்தது. அதனால் நமக்கு பெருமளவில் சரிவு ஏற்பட்டது. இருந்தபோதிலும் 1965 மற்றும் 1971-ம் ஆண்டுகளில் பாகிஸ்தான் போர் தொடுத்ததில் இந்தியா வெற்றிபெற்றது என்றார். இன்னும் நமது நாட்டிற்கு எதிராக பல சவால்கள் ஏற்பட்டுள்ளன என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். சில நபர்கள் நமது நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டு மீது குறிவைத்து உள்ளனர். நாட்டின் கிழக்கு அல்லது மேற்கு பகுதியில் இருந்து இந்தியாவுக்கு சவால் வந்தால் அதை சமாளிக்கும் அளவுக்கு இந்திய ராணுவ வீரர்கள் வலிமையாக உள்ளனர் என்று அருண்ஜெட்லி மேலும் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து