எறையூர் ஊராட்சியில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்

புதன்கிழமை, 9 ஆகஸ்ட் 2017      திருவள்ளூர்
Tvallur photo1

திருவள்ளுர் மாவட்டம், திருவள்ளுர் வட்டம், எறையூர் கிராமத்தில் மாவட்ட கலெக்டர்(மு.கூ.பொ)கே.முத்து தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது.

நலத்திட்ட உதவிகள்

பொதுமக்கள் அரசு நலத்திட்டங்கள் பற்றி தெரிந்துகொள்ள பொது சுகாதாரத்துறை, சமூக நலத்துறை, வேளாண்மைத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, வருவாய்த்துறை ஆகிய துறைகளின் உயர் அலுவலர்கள் திட்ட விளக்கவுரையும் வழங்கப்படுவதை, பொதுமக்கள் அரசின் மூலம் வழங்கப்படும் அனைத்து நலத்திட்டங்கள் தொடர்பான விபரங்களை தெரிந்துக்கொண்டு அந்த நலத்திட்ட உதவிகளை பெற்று பயனடைந்து தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும். பொதுமக்களிடமிருந்து திருவள்ளுர் வட்டத்தில் 191 தகுதிவாய்ந்த மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு அரசின் நலத்திட்ட உதவிகள் இன்று வழங்கப்படுகிறது.

18 பயனாளிகளுக்கு முதியோர் ஓய்வூதியத் தொகைக்கான ஆணையும்,47 பயனாளிகளுக்கு வாரிசு சான்றினையும், 54 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டைகளையும்;, 06 பயனாளிகளுக்கு ஆண் வாரிசு இல்லா சான்றினையும், 09 பயனாளிகளுக்கு உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் திருமணத் உதவித் தொகையும் (ரூ.8000 வீதம் 9 பயனாளிகளுக்கு ரூ.72,000),10 பயனாளிகளுக்கு உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இயற்கை மற்றும் ஈமச்சடங்குக்கான நிதி உதவித் தொகையும் (10 பயனாளிகளுக்கு ரூ. 1,30,000), 27 பயனாளிகளுக்கு சிறு, குறு விவசாய சான்றுகளையும், 06 பயனாளிகளுக்கு நத்தம் பட்டா நகலினையும், 1 பயனாளிக்;கு விதவை சான்றினையும், 1 பயனாளிக்கு பிறப்பு சான்றினையும், 7 பயனாளிகளுக்கு இறப்பு சான்றுகளையும் மற்றும் 05 பயனாளிகளுக்கு இதர சான்றுகளையும் ஆக மொத்தம் 191 பயனாளிகளுக்கு ரூ.2 இலட்சத்தி 2 ஆயிரத்திற்கான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன் என மாவட்ட கலெக்டர்(மு.கூ.பொ) கூறினார்.

முன்னதாக, மண் பரிசோதனை செய்த சான்றிதழ் 3 பயனாளிகளுக்கும், கூட்டுறவு பொதுசேவை மையம் மூலமாக 2 நபர்களுக்கு சாதி மற்றும் வருமானச் சான்றிதழ்களையும், தோட்டக்கலைத்துறை சார்பில் மாடித்தோட்ட தளைகளை 3 பயனாளிகளுக்கும் மாவட்ட கலெக்டர் (மு.கூ.பொ) வழங்கினார்.பின்னர், மாவட்ட கலெக்டர் (மு.கூ.பொ) பொதுமக்களிடம் இருந்து 100-க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு, அதற்கு உரிய தீர்வுகளை விரைந்து வழங்குமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களை அறிவுறுத்தினார்.

இத்திட்ட முகாமில், உதவி ஆட்சியர் (பயிற்சி) பவன்குமார். .கிரியப்பனவர்,தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்)சீ.ஜானகிராமன், திருவள்ளுர் வருவாய் கோட்டாட்சியர் கெ.ரா.திவ்யஸ்ரீ,திருவள்ளுர் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் எம்.சின்னசாமி,மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் மீனா,திருவள்ளுர் வட்டாட்சியர் கார்குழலி,நில அளவை துணை ஆய்வாளர் சண்முகம், தனி வட்டாட்சியர், துணை வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர்கள், பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

11 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த 17 பேருக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்? பொதுமக்கள் கருத்து

Vaara Rasi Palan ( 22.07.2018 to 28.07.2018 ) | வார ராசிபலன் | Weekly Tamil Horoscope

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து