முதல்கட்ட கலந்தாய்வு நிறைவடைந்தது: 85 ஆயிரம் பொறியியல் இடங்கள் நிரம்பின

வெள்ளிக்கிழமை, 11 ஆகஸ்ட் 2017      தமிழகம்
engineer counselling 2017 6 4

சென்னை : பொறியியல் படிப்பில் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான முதல்கட்ட கலந்தாய்வு நேற்றுடன் முடிவடைந்த நிலையில், 85 ஆயிரம் இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன.

நேற்றுடன் நிறைவு

பொறியியல் படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு சென்னையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்து வந்தது. கடந்த மாதம் 23-ம் தேதி தொடங்கிய பொதுப்பிரிவு கவுன்சிலிங் நேற்றுடன் நிறைவடைந்தது. மொத்தம் உள்ள 518 பொறியியல் கல்லூரிகள் மூலம் ஒரு லட்சத்து 75 ஆயிரத்து 339 இடங்களை நிரப்புவதற்கு நடந்த கலந்தாய்வில் பாதி இடங்கள் (50 சதவிதம்) மட்டுமே நிரம்பியுள்ளன.


ஆர்வம் குறைவு...

நேற்று முன்தினம் வரை ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 963 பேர் அழைக்கப்பட்டதில் 83,562 பேர் மட்டும் கல்லூரிகளை தேர்வு செய்து ஒதுக்கீட்டு இடங்களை பெற்றனர். கலந்தாய்வில் 50 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கவில்லை. பொறியியல் படிப்பில் சேருவதற்கான ஆர்வம் படிப்படியாக குறைந்து வருவதால் ‘ஆப் சென்ட்’ ஆனவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

90 ஆயிரம் இடங்கள் ....

கடந்த காலங்களில் ஒப்பிடும்போது இந்த வருடம் ஆப்சென்ட் விகிதம் அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் இரவு வரை 83,562 இடங்கள் மட்டும் நிரம்பியுள்ளன. 91,894 பொறியியல் இடங்கள் காலியாக இருந்தன. நேற்று பிற்பகலுடன் நிறைவடைந்த கலந்தாய்வில் 3 ஆயிரம் இடங்கள் தேர்வு செய்யப்பட்டாலும் கூட 89 ஆயிரம் முதல் 90 ஆயிரம் இடங்கள் வரை காலியாக வாய்ப்பு உள்ளது.

மோகம் குறைந்து ...

கடந்த 2014-ம் ஆண்டு ஒரு லட்சத்து 27 ஆயிரம் இடங்கள் நிரம்பின. 2013-ல் ஒரு லட்சத்து 24 ஆயிரம் இடங்களில் மாணவர்கள் சேர்ந்தனர். இப்படி படிப்படியாக குறைந்து இந்த வருடம் மொத்தம் 86 ஆயிரம் இடங்கள் நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொறியியல் படிப்பு மீது இருந்த மோகம் குறைந்து தற்போது கலை அறிவியல் கல்லூரிகள் பக்கம் திரும்பி உள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் அரசு மற்றும தனியார் கலை அறிவியல் கல்லூரிகளில் பட்ட வகுப்புகள் கூட்டம் நிரம்பி வழிகிறது.

மெக்கானிக்கல் பிரிவில்...

இந்த வருடம் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் பாடப் பிரிவில்தான் அதிகம் பேர் சேர்ந்துள்ளனர். எலக்ட்ரானிக் கம்யூனிகேசன் 2-வது இடத்திலும், கம்ப்யூட்டர் சயின்ஸ் 3-வது இடத்திலும் உள்ளது. ஏரோனாட்டிக்கல் என்ஜினீயரிங் படிப்பில் 2141 இடங்கள் இருந்த போதிலும் 1013 பேர் மட்டுமே சேர்ந்துள்ளனர். ஆயிரம் இடங்களுக்கு மேலாக காலியாக கிடக்கின்றன. அதே நிலையில்தான் ஆட்டோ மொபைல் என்ஜினீயரிங் பாடப்பிரிவும் உள்ளது.

துணை கலந்தாய்வு ...

சிவில் என்ஜினீயரிங் பாடப்பிரிவில் 25,257 இடங்கள் இருந்த போதிலும் 8 ஆயிரம் இடங்கள்தான் நிரம்பியுள்ளன. எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் (இ.இ.இ.) பாடப்பிரிவில் 22,519 இடங்கள் இருந்தாலும் 9,749 இடங்கள்தான் நிரம்பின. இந்த வருடம் முதல் பட்டதாரி குடும்பத்தை சேர்ந்த 44 ஆயிரம் பேர் சேர்ந்துள்ளனர். துணை கலந்தாய்வு 17-ந் தேதி நடக்கிறது. அதில் 1000 இடங்கள் நிரம்பினாலும் மீதமுள்ள இடங்கள் காலியாக கிடக்கும். அதனைத் தொடர்ந்து 18 ம் தேதி ஆதிதிராவிடர் அருந்ததியர் பிரிவில் நிரப்பப்படாமல் உள்ள இடங்களில் ஆதிதிராவிடர்கள் சேர்வதற்கான கலந்தாய்வு நடைபெறும். பொறியியல் படிப்பு மாணவர்களுக்கான வகுப்புகள் செப்டம்பர் 1 ம் தேதி முதல் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது..

மூட வேண்டிய நிலைக்கு...

ஆண்டுக்கு ஆண்டு காலி இடங்கள் அதிகரித்து வருவதால் தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகளில் அனைத்து கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய கல்லூரி எதுவென்று ஆய்வு செய்து அதில் சேரவே மாணவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். அதனால் எதிர்காலத்தில் சிறந்த கல்லூரிகள் மட்டுமே நிலைத்து நிற்க முடியும்.

இந்த வார ராசிபலன் - 24.06.2018 முதல் 30.06.2018 வரை | Weekly Tamil Horoscope from 24.06.2018 to 30.06.2018

Kashmiri Capscicum Chicken Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து