எகிப்து ரயில் விபத்தில் 43 பேர் பலி

சனிக்கிழமை, 12 ஆகஸ்ட் 2017      உலகம்
train

அலெக்ஸாண்டிரியா: எகிப்தின் கடற்கரை நகரமான அலெக்ஸாண்டிரியாவில் இரண்டு ரயில்கள் மோதிக் கொண்ட விபத்தில் 43 பேர் பலியாகினர். 100 பேர் காயமடைந்தனர்.

இதுகுறித்து எகிப்து ரயில்வே அதிகாரிகள் தரப்பில் கூறியபோது, “எகிப்து தலைநகர் கெய்ரோவிலிருந்து வந்த ரயிலும், கோர்ஷித் மாவட்டத்திலிருந்து வந்த மற்றுமொரு ரயிலும் வெள்ளிக்கிழமை இரவு ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டன. ரயிலில் பயணம் செய்தவர்களில் 43 பேர் பலியாகினர். 100 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என்று கூறப்பட்டுள்ளது. விபத்து நடந்ததற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. எகிப்து அதிபர் அப்தில் அல் சிஸி இந்த விபத்து தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். எகிப்தில் சமீபத்தில் நடந்த மோசமான ரயில் விபத்தாக இது கருதப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து