முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

"என் ஆளோட செருப்ப காணோம்" தலைப்பை கொண்டாடுகிறார்கள் இயக்குநர் பெருமிதம்!

ஞாயிற்றுக்கிழமை, 13 ஆகஸ்ட் 2017      சினிமா
Image Unavailable

Source: provided

புதிய கீதை,  ராமன் தேடிய சீதை உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் ஜெகன் தற்போது எஸ்.சக்திவேல் தயாரிப்பில் என் ஆளோட செருப்ப காணோம் என வித்தியாசமான புதிய படத்தை இயக்கி வருகிறார்.  இதில் பசங்க படத்தில் நடித்த பகோடா பாண்டி தமிழ் என்ற பெயரில் நாயகனாக நடிக்கிறார்.  கயல் ஆனந்தி நாயகியாக நடிக்கிறார். 

இவர்களுடன் யோகிபாபு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.  காதலியின் தொலைந்து போன ஒரு செருப்பைத்தேடி கடலூரில் இருந்து பாண்டிச்சேரி வரை பயணப்படுகிற ஒரு இளைஞநின் கதை தான் கலகல நகைச்சுவை படமாக்கப்பட்டுள்ளது.

இக்கதைக்கு மிகப்பெருத்தமாக தோன்றியதாலேயே என் ஆளோடா செருப்ப காணோம் என பெயரிட்டேன். ஆனால் இப்படத்தின் என்னிடம் முரண்பட்டே போயினர். எனக்கும் குழப்பமான சூழல் அப்போது தான். இஷான்தேவ் இசையமைப்பில் உருவான இப்படத்தின் பாடல்களை நண்பர் இயக்குனர் கவுதம் மேனனிடம் போட்டு காட்டினேன்.  பாடல்களை வியந்து பாராட்டினார்.

முழுக்கதையையும் கேட்டவுடன். ஜெகன் இந்த கதைக்கு நீ வைத்த தலைப்பு சரியானதுதான் என்று கூறினார்.  பாடல்களை நானே என் இசை நிறுவனத்தின் மூலம் வெளியிடுகிறேன் .மேலும் இதில் சிம்புவை ஒரு பாடலையும் பாடவைப்போம் என்று கூறினார். நாலரை நிமிடம் இடம் பெறும் இப்பாடலில் மொத்தம் 90 இடங்களில் செருப்பு என்ற வார்த்தை இடம் பெற்று இருந்ததால் முதலில் சிம்பு பாடலை தயங்கினார்.

பிறகு கதையையும் காட்சி அமைப்பினையும் விளக்கி போது மிகுந்த ஆர்வத்துடன் பாடினார்.ஸ்ரேயா கோஷலும் ஒரு பாடல் பாடியுள்ளார் கவுதம்மேனன், சிம்பு ஸ்ரேயா கோஷல் இவர்களின் பங்களிப்பிற்கு இப்படத்தலைப்பு காரணமாக முரண்பட்டு போனவர்கள் தற்போது சொல்லும் வார்த்தை என்ன தெரியுமா? என் ஆளோட செருப்ப காணோம் இது வேற லெவல் படம்ப்பா. இளைஞர்களின் கொண்டாட்டமாக இருக்கிறது என்கிறார்கள். இந்த பாராட்டு இப்படத்திற்கும் அதன் தலைப்பிற்கும் கிடைத்த வெற்றியாகவே கருதுகிறேன் என்றார் இயக்குனர் ஜெகன்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து