முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3-வது டெஸ்ட்டில் இந்திய அணி ஆதிக்கம்: 135 ரன்னில் சுருண்டு பாலோ-ஆன் ஆனது இலங்கை

ஞாயிற்றுக்கிழமை, 13 ஆகஸ்ட் 2017      விளையாட்டு
Image Unavailable

பல்லேகலே : இலங்கைக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 487 ரன்கள் குவித்த ஆல்-அவுடானது. பின் ஆடிய இலங்கை இந்திய வீரர்களின் பந்துவீச்சில் 137 ரன்னில் சுருண்டு பாலோ-ஆன் ஆனது.

329 ரன்கள் ...

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பல்லேகலேயில் நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார். முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 329 ரன்கள் எடுத்தது. தவான் 119 ரன்களும் ராகுல் 85 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். சகா 13 ரன்னுடனும், ஹர்திக் பாண்டியா 1 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

ஹர்திக் பாண்டியா

இந்நிலையில், இரண்டாம் நாளான நேற்று தொடர்ந்து களமிறங்கிய சகா 16 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் களமிறங்கிய குல்திப் யாதவ் 26 ரன்களிலும், முகமது சமி 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதன்மூலம் இரண்டாம் நாள் உணவு இடைவேளைவரை இந்திய அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட்களை இழந்து 487 ரன்கள் குவித்தது. உணவு இடைவேளைக்கு முன்னர் அதிரடியாக விளையாடிய ஹர்திக் பாண்டியா இடைவேளைக்கு பின்னர் இரண்டு பந்துகளை சந்தித்து தில்ருவான் பெரராவிடம் ’கேட்ச்’ கொடுத்து மொத்தம் 96 பந்துகளில் 108 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதுவே டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது அதிகபட்ச ஸ்கோராகும். உமேஷ் யாதவ் 3 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

487 ரன்களுக்கு ...

இலங்கை அணி பந்துவீச்சில் லக்‌ஷ்ன் சந்தகன் ஐந்து விக்கெட்களையும் மலிந்தா புஷ்பகுமாரா 3 விக்கெட்களையும் விஷ்வா பெர்னாண்டோ 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். இதன்மூலம் இந்திய அணி முதல் இன்னிங்சில் 487 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது.

குல்தீப் யாதவ் ...

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி இந்தியாவின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 37.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 135 ரன்னில் சுருண்டது. இந்தியாவை விட 352 ரன்கள் பின்தங்கியதால் இந்தியா பாலோ-ஆன் கொடுத்தது. இதனால் இலங்கை அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. இலங்கை அணி தரப்பில் கேப்டன் சண்டிமல் அதிகபட்சமாக 48 ரன்கள் சேர்த்தார். இந்திய அணியில் குல்தீப் யாதவ் நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து