இந்திய சுதந்திரதினத்தை முன்னிட்டு சிவகங்கை நேஷ்னல் ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள்

sivagangai news

சிவகங்கை.-இந்திய சுதந்திரதினத்தை முன்னிட்டு சிவகங்கை நேஷ்னல் ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் இரண்டாம் ஆண்டாக மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளை சிவகங்கை மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் ஹாக்கி, கால்பந்து, கபடி, இறகுபந்து ஆகிய போட்டிகள் நடைபெற்றது. இறகுபந்து போட்டியில் 24 அணிகள் கலந்து கொண்டனர். இதில் முதல் பரிசை மானாமதுரை ரெங்கசாமி அணியினரும், மகேஷ் அணியினரும் பெற்றனர், இரண்டாம் பரிசினை சிவகங்கை அபுதாகீர், கௌரி அணியினரும் பெற்றனர். கபடி போட்டியில் 8 அணிகள் கலந்து கொண்டனர். இதில் முதல் பரிசினை குமாரபட்டி அணியினரும், இரண்டாம் பரிசினை மேலமங்களம் அணியும் பெற்றனர். லீக் முறையில் நடைபெற்ற ஹாக்கி போட்டியில் முதல் இடத்தை சிறப்பு அணியாக பங்கேற்ற விருதுநகர் பெட்ரோஸ் அணியும் இரண்டாம் பரிசினை சிவகங்கை தன்ராஜ்பிள்ளை ஹாக்கிகிளப் அணியும் பெற்றனர். ஐவர் கால்பந்து போட்டியில் மொத்தம் 16 அணிகள் கலந்து  கொண்டனர். இதில் முதல் பரிசினை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு விடுதி அணியும், இரண்டாம் பரிசினை சிவகங்கை கால்பந்து கழக அணியும் பெற்றனர். வெற்றிபெற்ற அணிகளுக்கான சுதந்திரதின வெற்றிகோப்பைகளை கேப்டன் சரவணன் வழங்கினார். பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கோட்டாட்சியர் சுந்தரமூர்த்தி இராமநாத சமஸ்தான இளைய மன்னர் பாபு சண்முகநாதசேதுபதி, சாம்பவிகா பள்ளி செயலாளர் சேகர், மாவட்ட விளையாட்டு அலுவலர் இராமசுப்பிரமணியம் உட்பட பலர் கலந்து  கொண்டனர். போட்டிகளுக்கான ஏற்பாடுகளை நேஷ்னல் ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் சேர்மன் பாருக் செய்திருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து