Idhayam Matrimony

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழத்தில் துணைவேந்தர் கொடியேற்றி வாழ்த்துறை

புதன்கிழமை, 16 ஆகஸ்ட் 2017      சிவகங்கை
Image Unavailable

காரைக்குடி:-காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் 71வது சுதந்திரதினவிழா கோலாகலமாக கொண்டாடப் பட்டது.  பல்கலைக்கழக துணைவேந்தர் பேரா. சொ.சுப்பையா  தேசியக்கொடியை ஏற்றிவைத்து பல்கலைக்கழக மாணவ,மாணவியர் மற்றும் வளாகப் பாதுகாவலர்கள் அளித்த அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு சுதந்திர தினவிழா உரை நிகழ்த்தினார்.
 அவர் தமது உரையில் நமது நாடு சுதந்திரம் அடைய முக்கிய காரணமாக இருந்த சுதந்திரதியாகிகளையும் தலைவர்களையும் இந்நன்னாளில் நினைவு கூர்ந்தார்.  அரும்பாடுபட்டு பெற்ற சுதந்திரத்தை நாம் பேணிப் பாதுகாக்க வேண்டியது நமது ஒவ்வொருவரின் கடமையாகும் என்றும் நமது ஒவ்வொரு செயல்பாடும்; நாட்டின் முன்னேற்றத்தை சார்ந்ததாக இருக்கவேண்டும் என்றும் கூறினார்.  விவசாயிகள், தொழிலாளர்கள், விஞ்ஞானிகள், ஆசிரியர்கள், சமூகநல அலுவலர்கள், தாய்மார்கள் மற்றும் சகோதரிகள் மற்ற அனைவரின் கடுமையான உழைப்பாலும், தியாகத்தாலும் நமதுநாடு இந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளது என்பதை நாம் என்றும் நினைவில் கொள்ள வேண்டும். நமது நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு இலட்சக்கணக்கான திறன் சார்ந்த தொழிலாளர்கள் தேவைப்படுகிறார்கள் என்றும் ஆதலால் திறன்சார் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிற தென்றும் கூறினார்.
 அழகப்பாபல்கலைக்கழகம் தேசியத் தரநிர்ணயக் குழுவின் மூன்றாம் சுற்றுமதிப்பீட்டில் 3.64 புள்ளிகள் பெற்று யூதரம் பெற்று தென்னிந்தியமாநில பல்கலைக்கழகங்களிலே முதல் பல்கலைக்கழகமாகவும், இந்திய அளவில் யூ தகுதி பெற்ற 4 பல்கலைக்கழகங்களில் அழகப்பாபல்கலைக்கழகமும் ஒன்று எனக் குறிப்பிட்டார். இத்தர அடிப்படையில் பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு 02.06.2017 தேதியிட்ட தனது அறிவிப்பில் அழகப்பாபல்கலைக்கழகத்தை முதல் தர பல்கலைக்கழக வரிசையில் சேர்த்துள்ளது எனதெரிவித்தார். அழகப்பாபல்கலைக்கழகம் யூ தகுதியை பெற்றதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கிய ஆட்சிக்குழு மற்றும் ஆட்சிப்பேரவை உறுப்பினர்கள், புலமுதன்மையர்கள், துறைத் தலைவர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
 மேலும் கனடாநாட்டில் உள்ள ஒன்டாரியோகுலீப் நகரில் 04.08.2017 முதல் 12.08.2017 வரை நடைபெற்ற உலகளவிலான உயரம் குறைந்தவர்களுக்கான பாராலிம்பிக் போட்டியில்;; அழகப்பாபல்கலைக்கழக பாராவிளையாட்டு மையமாணவர் அ.செல்வராஜ்என்பவர் ஈட்டி எறிதல் போட்டியில் கலந்து கொண்டுமுதல் நிலைபிரிவு (கிளாஸ் ஜ கேட்டகிரி) போட்டியில் 26.54 மீட்டர் ஈட்டி எறிந்து தங்கபதக்கத்தை வென்று பல்கலைக்கழகத்திற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
   பல்கலைக்கழக பதிவாளர் (பொ) பேரா. வி.பாலச்சந்திரன், ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பேரா. ஏ.நாராயணமூர்த்தி, ஜெ.ஜெயகாந்தன் மற்றும் கே. குருநாதன், தேர்வுகட்டுப்பாட்டு அலுவலர் முனைவர் குருமல்லே  பிரபு, நிதி அலுவலர் ளு.முருகராஜ், புலமுதன்மையர்கள், பேராசிரியர்கள், அதிகாரிகள், அலுவலர்கள், மற்றும் மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.  பல்கலைக்கழக உடற்கல்வியில் கல்லூரி முதல்வர்(பொ) முனைவர் கே. முரளிராஜன்; தலைமையிலான குழுவினர் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து