முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அடுத்த 48 மணி நேரத்துக்கு தமிழகத்தில் கன மழை பெய்யும்

வியாழக்கிழமை, 17 ஆகஸ்ட் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : அடுத்த 2 நாட்களுக்கு வட தமிழகத்தின் ஒருசில பகுதிகளிலும், தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கடந்த 6 ஆண்டுகளில் ஆகஸ்ட் மாதத்தில் பெய்த மழையின் அளவோடு ஒப்பிடுகையில் இந்த மாதம் தமிழகத்தில் பெய்திருக்கும் மழையானது அதிகபட்ச அளவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாலச்சந்திரன், தமிழகத்தின் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் பலத்த மழையும், ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்துள்ளது. அடுத்த இரு தினங்களைப் பொருத்தவரை, வட தமிழகத்தின் ஒருசில பகுதிகளிலும், தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றார். சென்னையைப் பொருத்தவரை மாலை மற்றும் இரவு நேரங்களில் இடைவெளி விட்டு ஓரிரு முறை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தென்மேற்குப் பருவ மழையை பொருத்த வரை கடந்த ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 16 வரை தமிழகம், புதுவையில் 18% முதல் 22% வரை மழை பெய்துள்ளது. இது வழக்கத்தை விட 33% அதிகமாகும். அதன்படி, கடந்த 6 ஆண்டுகளில் இது அதிகபட்ச அளவாகும். கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவில், அதிகபட்சமாக சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 8 செ.மீ. மழை பெய்துள்ளது என்று தெரிவித்தார். இன்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-

ஜெயங்கொண்டம், ஸ்ரீபெரும்புதூர், புவனகிரி, 5 செ.மீ , குடவாசல், சோபிசெட்டிபாளையம், வலங்கைமான் 4 செ.மீ., காஞ்சிபுரம், தஞ்சாவூர் பாபநாசம், திண்டுக்கல் காமாட்சிபுரம், திருமானூர், பொன்னேரி, பெரம்பலூர், நுங்கம்பாக்கத்தில் 3 செ.மீ., மீனம்பாக்கம், சிதம்பரம், சேத்தியாதோப்பு 2 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து