முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் பயணம்

திங்கட்கிழமை, 21 ஆகஸ்ட் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை: பெரியகுளம் நகர்மன்றத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டு தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய ஓ.பன்னீர்செல்வம் இடையில் 3 முறை ஜெயலலிதாவால் முதல்வராக்கப்பட்டு, அவரது மரணத்திற்குப் பிறகு தற்போது துணை முதல்வர் பதவியை ஏற்றுள்ளார்.

* 1996 - 2001: தமிழ்நாடு உள்ளாட்சி மன்றத் தேர்தலில் பெரியகுளம் நகர்மன்றத் தலைவராக செயல்பட்டார்.
* 2001: சட்டசபைத் தேர்தலில் பெரியகுளம் தொகுதியில் இருந்து போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
* மே 19, 2001 - செப்டம்பர் 1, 2001: வருவாய்த்துறை அமைச்சராக செயல்பட்டார்.
* செப்டம்பர் 21, 2001 - மார்ச் 1, 2002: முதல் முறையாக ஓ.பன்னீர்செல்வம் தமிழக முதல்வரானார்.
* மார்ச் 2, 2002 - டிசம்பர் 2006: பொதுப்பணித்துறை அமைச்சர்.
* 2006: சட்டசபைத் தேர்தலில் மீண்டும் பெரியகுளம் தொகுதியில் வெற்றி.
* 2006 - 2010: சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவராக செயல்பட்டார் .
* 2011: போடிநாயக்கனூர் சட்டசபைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி.
* மே 16, 2011: நிதி அமைச்சர் மற்றும் அவை முன்னவராக செயல்பட்டார்.
* செப்டம்பர் 27, 2014: ஜெயலலிதா சிறை சென்றதால் ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக செயல்பட்டார்.
* மே 22, 2012: ஜெயலலிதா விடுதலையானதால் முதல்வர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தார்.
* 2016: போடிநாயக்கனூர் சட்டசபைத் தொகுதியில் போட்டியிட்டு நான்காவது முறையாக வெற்றி.
* மே 16, 2016: நிதி அமைச்சர் மற்றும் அவை முன்னவராக செயல்பட்டார்.
* டிசம்பர் 5,2016: ஜெயலலிதா உயிரிழந்ததால் ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக நள்ளிரவில் பதவியேற்பு.
* பிப்ரவரி 5, 2017: சசிகலா குடும்பத்தினரின் வற்புறுத்தலால் முதல்வர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தார்.
* ஆகஸ்ட் 21, 2017: முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசில்  துணை முதல்வராக பதவியேற்று தனது நீண்ட கால அரசியல் பயணத்தை தொடர்ந்து  கொண்டு இருக்கிறார் பன்னீர்செல்வம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து