முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செப்டம்பர் 1 முதல் அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம் - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 22 ஆகஸ்ட் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் ஓட்டுநர்கள் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் இன்று சாலை பாதுகாப்பு விபத்து தடுப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் மாநகர் போக்குவரத்துக் கழக கலந்தாய்வு கூடத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமை செயலாளர், போக்குவரத்து ஆணையர், கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநர் (போக்குவரத்து மற்றும் திட்டமிடல் பிரிவு), சுகாதார துறை இயக்குநர் (தேசிய சுகாதார திட்டம்), கூடுதல் கால் துறை ஆணையர் (போக்குவரத்து), மேலாண்மை இயக்குநர் (மாநகர் போக்குவரத்துக் கழகம், மாநில அரசு போக்குவரத்துக் கழகம்), இணை இயக்குநர் (நெடுஞ்சாலைத் துறை), தலைமை பொது மேலாளர் (இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையகம்), சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் வட்டாரப் போக்குவரத் அலுவலர்கள், இணைப் போக்குவரத்து ஆணையர் (நிர்வாகம்), (சாலை பாதுகாப்பு), (சென்னை வடக்கு சரகம்), (சென்னை தெற்கு சரகம்) ஆகியோர் பங்கேற்றனர்.

போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் புதிதாக மின்சார பேருந்தை ஆய்வு செய்து, பேருந்தில் பயணம் செய்தார். இதன் பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளி்த்த அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர்., பண்டிகை காலங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்ட ஆம்னி பேருந்துகள் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக கூறினார். விபத்து ஏற்படுத்திய வழக்கில் இதுவரை 9 ஆயிரத்து 500 ஓட்டுநர் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர். மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் சிறப்பாக உள்ளதாக தெரிவித்தார். செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் ஓட்டுநர்கள் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்து கொண்டு வாகனங்களை இயக்க வேண்டும் என கூறிய அமைச்சர் விஜயபாஸ்கர், அசல் ஓட்டுனர் உரிமம் காணாமல் போனால் மாற்று உரிமம் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து