காரைக்குடி அழகப்பாபல்கலைக்கழகத்தில் சமூக நல்லிணக்க நாள் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

புதன்கிழமை, 23 ஆகஸ்ட் 2017      சிவகங்கை
sivagangai news

காரைக்குடி:-காரைக்குடி அழகப்பாபல்கலைக்கழக நாட்டு நலப் பணித் திட்டம் மற்றும் சுவாமி விவேகானந்தர் உயர் ஆய்வு மற்றும் கல்விமையம் ஆகியவற்றின் சார்பில் “சமூக நல்லிணக்க நாள்” சிறப்புச் சொற்பொழிவு நிகழ்ச்சி அறிவியல் வளாக கருத்தரங்க கூடத்தில் நடைபெற்றது.
 இந்நிகழ்ச்சியில், அழகப்பாபல்கலைக்கழகப் பதிவாளர் (பொ.) பேரா.வி. பாலச்சந்திரன் தலைமையுரையாற்;றினார்.  அவர் தமது உரையில், இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நாடு.  பல்வேறுமதங்கள், பண்பாடுகள், பழக்கவழக்கங்கள் கொண்டநாடு. இத்தகைய பெருமைமிகு நாட்டில் நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் உயர்வு நிச்சயம் உண்டாகும்;. ஒருவருக்கொருவர் அன்பும், பாசமும், செலுத்தி மகிழ்ச்சியுடன் வாழ்ந்தால் நாட்டின் வளர்ச்சி உறுதியாக அமையும். நம் நாட்டு மக்கள் அனைவரும் எவ்வித வேறுபாடும் இல்லாமல் இந்தியர் என்ற ஒரே உணர்வுடன் செயல்பட்டால் முன்னேற்றம் நிச்சயம் உண்டாகும் என்றார்.
 கோயம்புத்தூர் கொங்கு நாடுகலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் பேரா. கே. முருகேசன் தமது சிறப்புரையில், உலக மதங்கள் அனைத்தும் உயர்ந்தவை என்றும், அனைவராலும் மதிக்கத்தக்கவை என்றும், அம்மதங்கள் அனைத்தும் மனிதனை மனிதனாக வாழ பக்குவப்படுத்துகின்றன என்றும் தெரிவித்தார். தூய உள்ளம் யாரிடம் உள்ளதோ அவரிடம் இறைவன் வந்துதங்குகிறான்.  உண்மையானஅன்புதான் கடவுள்.  அன்பைவிதைத்தால் அனைத்தையும் அடையலாம் என எல்லாமதங்களும் வலியுறுத்துகின்றன. மாணவர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் இணக்கத்தோடும், மகிழ்ச்சியோடும் வாழப் பழகவேண்டும்.  இது நம்மையும் உயர்த்தும், நாட்டையும் உயர்த்தும்  என்று குறிப்பிட்டார்.    
 அறிவியல் புலங்களைச் சார்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.  முன்னதாக, நாட்டு நலப் பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் சு. இராசாராம் அனைவரையும் வரவேற்றார்.  சுவாமி விவேகானந்தா உயராய்வு மற்றும் கல்விமைய ஒருங்கிணைப்பாளர் திருமதி. எஸ்.செல்லம் நன்றி கூறினார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து