சிவகங்கை சாம்பவிகா மேல்நிலைப்பள்ளியில் தேசிய விளையாட்டுத் தினம்

siva

சிவகங்கை. சிவகங்கை சாம்பவிகா மேல்நிலைப்பள்ளியில் தேசிய விளையாட்டு தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.  நமது தேசிய விளையாட்டான ஹாக்கியில் சாதனை படைத்த ஹாக்கியின் பிதாமகன் தயான்சந்த் நினைவாக அவரின் பிறந்த தினமான ஆகஸ்ட் 29 அன்று தேசிய விளையாட்டுதினம்  ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு சாம்பவிகா பள்ளியின் செயலர் சேகர் அவர்கள் விளையாட்டின் முக்கியத்துவம் மற்றும் அதன் நன்மைகள் பற்றியும் மேலும் மாணவர்கள் அனைவரும் கல்வியில் சிறந்து விளங்குவதோடு விளையாட்டுத் துறையிலும் ஈடுபடவேண்டும் என மாணவ மாணவியர்களுக்கு விளக்கி கூறினார்கள். இதன் தொடர்ச்சியாக நம் தேசிய விளையாட்டான ஹாக்கி மட்டை மற்றும் பந்து வடிவில் மாணவர்கள் அமர்ந்து இன்றைய தினத்தின் முக்கியத்துவத்தை அழகாக எடுத்துக்காட்டினார்கள். இவ்விழா ஏற்பாடுகளை தலைமையாசிரியர் முத்துக்குமார் மற்றும் ஆசிரியர்கள்  செய்திருந்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து