சாலை பாதுகாப்பு குறித்து சிறப்பு விழிப்புணர்வு முகாம் : கலெக்டர் லதா துவக்கி வைத்தார்

sivagangai news

 சிவகங்கை -சிவகங்கை மாவட்டம் வட்டாரப் போக்குவரத்துத் துறையின் சார்பில் சாலை பாதுகாப்பு குறித்து மான்போர்ட் பள்ளியில் மாணவ, மாணவியர்களுக்கான சிறப்பு விழிப்புணர்வு முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் க.லதா, துவக்கி வைத்தார்.
மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பேசும்போது தெரிவித்ததாவது,
மாணவ, மாணவியர்களாகிய நீங்கள் தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணிவதின் அவசியத்தை பெற்றோர்களிடம் எடுத்துக் கூற வேண்டும். சாலை விதிகளைப் பின்பற்றி விபத்தில்லாத சமுதாயத்தை உருவாக்குவது மாணவர்களாகிய உங்கள் கையில் உள்ளது. மேலும், சாலை விதிகளின் அவசியத்தை பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் எடுத்துக் கூற வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார். இம்முகாமில் சிவகங்கை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் திருவள்ளுவன், மான்போர்ட் பள்ளி தாளாளர் ஜோசப், சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி அமைப்பாளர் நரசிம்மமணி மற்றும் ஆசிரியர்கள், பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து