தினமும் உடலில் உண்டாகும் நச்சுப்பொருட்களை வடிகட்டி கழிவுகளை வெளியேற்றும் சீறுநீரகம்

வெள்ளிக்கிழமை, 8 செப்டம்பர் 2017      மருத்துவ பூமி
kidney

Source: provided

உடலின் முக்கிய உறுப்பான சிறுநீரகம் நன்றாக செயல்பட்டாலே போதும், உடல் கட்டுக்கோப்புடன் வாழலாம். தினமும் உடலில் உண்டாகும் நச்சுப்பொருட்களை வடிகட்டி கழிவுகளை சிறுநீரில் அனுப்பும் முகககிய பணியை செய்து கொண்டிருக்கிறது. தேவைக்கு அதிகமான உப்புக் கல்களையும், தாதுக்களையும்பிரிக்கிறது.

சிறுநீரகங்கள், இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுக்குள் வைப்பதிலும், உடலில் இருக்கும் திரவத்தின் அளவைக் கட்டுப்படுத்தி வைப்பதிலும், மற்றும் இதர இரசாயனங்களின் அளவை உடலுக்குள் பாதுகாத்து வருகின்றன. முன்பு உண்ணும் உணவும், உணவுப் பொருள் உற்பத்தியும் இயற்கையாக இருந்தது. செயற்கை உரம் போட்டு விளைந்த உணவுப் பொருட்கள், சுத்தமற்ற குடிநீர், குளிர்பானங்கள் எல்லாமும் இரத்தத்தில் அதிக அழுக்கை (ரசாயனம்) சேர்க்கின்றன.

இரத்த சுத்திகரிப்பு கடினமான நிலையில் மெல்ல மெல்ல பாதிப்படைய அரம்பித்து விடும். உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், காரணமாகவும் கிட்னி செயல் இழக்கும். உடலை சரிவர பராமரிப்பதற்கு நமக்கு நேரம் கிடைப்பதில்லை. இதன் விளைவாக நோய்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. சிறுநீரக நோய்கள் என்பது சத்தமில்லாமல் உடலை மோசமடைய வைக்கும். சீக்கிரமே சிறுநீரக நோயை கண்டுபிடித்ததால் சிறப்பான சிகிச்சையின் மூலம் நம்மை காத்துக்கொள்ள முடியும்.

இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகம் இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள், சிறுநீரக நோயின் முதல் அறிகுறியே சிறுநீர் வெளியேறும் அளவிலும், எத்தனை முறை கழிக்கிறோம், சிறுநீர் கழிக்கும் எண்ணிக்கை வீதமும் கூடுதலாக அல்லது குறைவாக இருக்கலாம். சிலநேரம் சிறுநீர் கழிக்கையில் வலி ஏற்படலாம். தொற்றுக்கள் சிறுநீரக பாதையில் ஏற்பட்டிருக்கலாம். இது வேறு காரணங்களாகவும் இருக்கலாம். உடனே மருத்துவரை அணுகவும்.

கை கால்களில் வீக்கம், இரத்த சோகை, உடல் சோர்வு, இரத்தத்தில் யூரியாவின் அளவு அதிகரித்து விடும், யூரியா நம் எச்சிலில் அமோனியாவாக உடையும். இது மூச்சு காற்றை சிறுநீரகம் போன்ற கெட்ட வாடையாக மாற்றும். இதனால் வாயில் எப்போதும் எரிச்சலை ஏற்படுத்தும் மெட்டாலிக் சுவை உண்டாகும்.

குமட்டல் வாந்தி இருக்கும், சிறுநீரக குழாயில் கல் இருந்தால் கீழ் முதுகில் வலி ஏற்படும். இதை இயற்கையான முறையில் வெளியேற்றலாம்.

நோயை தவிர்க்க :  இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்தல். ஆரோக்கிய உணவுப் பழக்கம். உடல் எடையை கட்டுக்குள் வைத்தல். தேவை இல்லாத மருந்து மாத்திரைகளை உண்ணாதிருத்தல். போதிய நீர், இளநீர், ஆப்பிள், பழச்சாறு, எலுமிச்சை சாறு, மோர், பால் குடித்தால் நோய் வராமல் தடுக்கலாம். நீராகாரம் சிட்ரஸ் பழங்களின் அளவை அதிகரிக்க வேண்டும். இறைச்சி, உலர் பழங்களை தவிர்க்க வேண்டும். உப்பு, காரம், மசாலா குறைக்க வேண்டும். வாழைத்தண்டு அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். மது அருந்துவதைத் தவிர்க்க வேண்டும்.

கால்சியம் கல்  உள்ளவர்கள், பூசணிக்காய், வெள்ளரிக்காய், சுரைக்காய், சௌசௌ, பீர்க்கங்காய் போன்ற நீர்ச்சத்துள்ள காய்கறிகளை அதிக அளவில் சேர்க்கவும். ஆக்சலேட் கல் இருப்பவர்கள், எல்லாக் காய்கறிகளையும் சேர்த்துக் கொள்ளலாம். சோயா மற்றும் கோகோ, சாக்லெட், பிளாக் டீ போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். பசலைக் கீரையைத் தவிர்ப்பது நல்லது.

யூரிக் ஆசிட் கற்கள் : எக்ஸ்ரேவில் தெரியாது. புரதச் சத்து அதிகம் உள்ள உணவை எடுத்துக் கொள்பவர்களுக்கு போதுமான அளவு நீர் அருந்தாதவர்களுக்கும் இந்தக் கல் உருவாகிறது.

ஸ்ரூவைட் கற்கள்  :  நோய்த் தொற்று, சிறுநீர்ப்பாதையில் நோய்த் தொற்று காரணமாக இந்தக் கற்கள் தோன்றும். இது மிக விரைவிலேயே பெரிதாகும்.

சிஸ்டின் கற்கள்  :  மரபியல் ரீதியாகத் தோன்றக்கூடியது. சிறுநீர் தெளிவானதாக வெளியேறும் அளவுக்கு தண்ணீர் அருந்துவது நல்லது. திரவ உணவை எடுத்துக்கொள்வது போன்றவை கல்லை வெளியேற்றும் செயல்பாட்டை ஊக்குவிக்கின்றன. இப்படிச் செய்யும்போது பெரும்பாலான சிறிய கற்கள் தானாகவே சில மணி நேரங்களுக்குள் அல்லது சில நாட்களில் வெளியேறிவிடும். மருத்துவரின் ஆலோசனை மிக அவசியம்.

சர்க்கரை நோயும் சிறுநீரகமும் :  சர்க்கரை நோய் தாக்கும் உறுப்புகளில் சிறுநீரகமும் ஒன்று. சர்க்கரை நோயாளிகள் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தத் தவறும்போது அவர்களின் சிறுநீரகங்களில் உள்ள நெப்ரான்கள் தடினமாகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள கழிவுகளை வடிகட்டி அகற்றும். அதன் திறன் பாதிக்கப்படுகிறது.

இந்த பாதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக ஏற்படும். இதனால், நெப்ரானில் கசிவுகள் ஏற்படுகின்றன. அல்புமின் அதிக அளவில் சிறுநீரில் கலந்து வெளியேறுகிறது. பிரச்சினையை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதன் மூலம் பாதிப்பின் வேகத்தைக் குறைக்கலாம். புரதம் வெளியேறினால் சிறுநீரகம் அதிக அளவில் பாதிக்கப்பட்டு விட்டது என்று அர்த்தம். ஆரோக்கியமான உணவு, இயன்முறை மருத்துவம் மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தின் மூலம் சர்க்கரை நோயின் பக்கவிளைவுகளை முழுமையாக 3 மாதத்தில் குணப்படுத்தலாம்.

உயர் ரத்த அழுத்தமும் சிறுநீரகமும்  :  சிறுநீரகங்களின் செயல்பாடானது அதற்கு ரத்தத்தைக் கொண்டுவந்து சேர்க்கும் ரத்தக் குழாயின் ஆரோக்கியத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. உயர் ரத்த அழுத்தமானது சிறுநீரகங்களுக்குச் செல்லும் ரத்தக் குழாயைப் பாதிக்கிறது. சர்க்கரை நோயோடு, உயர் ரத்த அழுத்தமும் சேரும்போது நிலைமை இன்னும் சிக்கலாகிவிடுகிறது.

உயர் ரத்த அழுத்தத்தின் மிக மோசமான விளைவுகளுள் ஒன்று சிறுநீரகச் செயல் இழப்பு உயர் ரத்த அழுத்தமானது சிறுநீரகத்தின் திறனைப் பாதித்து உடலில் நச்சுக்களின் அளவை அதிகரிக்கச் செய்கிறது. இதனால் டயாலிசிஸ் செய்ய வேண்டிய நிலைக்கு முற்றிவிடுகிறது.

பெண்களை அதிக அளவில் தாக்கும் சிறுநீரகப் பிரச்சினை :  சிறுநீரகம், சிறுநீரகத்தில் இருந்து சிறுநீர்ப்பை வரையுள்ள குழாய், சிறுநீர்ப்பை, சிறுநீர்ப்பையில் இருந்து சிறுநீர் வெளியேறும் பாதை என எங்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். ஈகோலை பாக்ட்டீரியாவால் சிறுநீர்ப் பாதையில் நோய் தொற்று ஏற்படுகிறது. இந்தக் கிருமி நம்முடைய குடலில் இருக்கக் கூடியது. மலம் கழிக்கும்போது இந்தக் கிருமி வெளியேற்றப்படுகிறது. பெண்களுக்கு அவர்கள் உடல் அமைப்பு காரணமாக இந்தக் கிருமித் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகமிக அதிகமாக உள்ளது. உடல் உறவின் மூலமும் இந்தக் கிருமித் தொற்று ஏற்படுகிறது.

உடலுறவில் ஈடுபட்டதும், சிறுநீர் கழித்துவிட வேண்டும். இதனால் பாக்ட்டீரியா தொற்று ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.
சிறுநீர்ப் பாதையில் நோய்த் தொற்று அறிகுறி இருந்தால் சிறுநீர் பரிசோதனை (யூரின் கல்சர்) பரிந்துரைக்கப்படும். மருத்துவரை அனுகவும். ஆலோசனைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

உணவு பழக்க வழக்கங்கள் :  பொட்டாசியம் மிகுதியாக இருக்கும் பழங்களை தவிர்க்கவும். வாழைப்பழம், உலர்ந்த பழங்கள், மாதுளை, பப்பாளி, வெண்ணைப் பழம் தவிர்க்கவும்.
உப்பைக் குறைக்கவும், உப்பைக் கு¬றைத்தால் உயர் ரத்த அழுத்தம், மூச்சுத் திணறல், தாகம், வீக்கம் போன்ற சிக்கல் வராது.

சாப்பிடக் கூடியவை :  தண்ணீர்விட்டான் கிழங்கு: சமைத்து சாப்பிட்டால் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். இது சிறுநீரகத்திற்கு மிகவும் நல்லது கல் மற்றும் Urinary infection வராமல் தடுக்கும். சிறுநீரக செயல்பாடுகள் சீராகும்.
பூண்டு : இரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படாமல் தடுக்கும். கல்லீரல் மற்றும் சிறுநீர்ப்பை சரியாக செயல்படும்.

தர்பூசணி : நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். உயர்ரத்த அழுத்தம் குறையும். சிறுநீரக சம்பந்தமான அனைத்து பிரச்சினைகளையும் தீர்வு காண உதவும். சீறுநீரக கல் கூட கரைந்து வெளியே வரும்.

இயன்முறை மருத்துவம் மற்றும் ஆயுர்வேத மருத்துவம் :  இடுப்பு தளம் உடற்பயிற்சியினால் இவை அனைத்தும் மேம்படுத்த முடியும்.

சிறுநீர்ப்பை கட்டுப்பாடு, சிறுநீர் அடங்காமை, சிறுநீர் பாதையில் தொற்று, சிறுநீர் தேக்கம், பாலீடுபாடு உணர்தல்.

(Increase sexual sensation and orgasmic potential

ஆயுர்வேத மருந்து :  ஆயுர்வேத மருத்துவத்தில் உயர் ரத்த அழுத்தத்திற்கு 3 மாதங்கள் தொடர்ந்து மருந்து உட்கொள்வதால் இரத்த அழுத்தம் கட்டுப்படும். சிறுநீரக நோய் வராது. (Renal artery disease) சர்க்கரை நோய் கட்டுக்குள் வைக்கும். Diabetic Retinopathy, Dabetic Nephropathy, Diabetic Nerropathy மாரடைப்பு, பக்கவாதம், DVT (Deep Vein Thrombresis) ஆழ் ரத்த நாளத்தில் ரத்தக் கட்டு. இவை அனைத்திற்கும் ஒரே மருந்தில் தீர்வு கிடைக்கும்.

Johnny Movie Review | Top Star Prashanth | Sanchita Shetty | Vetriselvan | Thiagarajan

Thuppakki Munai Review | Vikram Prabhu | Hansika | Movie Review | Thinaboomi

ஆன்மிகம் என்றால் என்ன | Aanmeegem | Brahma Kumaris Tamil | Arivom AanmeegamTamil

Learn colors with 10 Color Play doh and Bumblebee | Learn numbers with Clay and balloons and #TMNT

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து