முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குஜராத்தில் இடஒதுக்கீடு போராட்டம் அரசியல் ஆதாயத்திற்காக நடக்கிறது - காங்கிரஸ் மீது அமீத்ஷா தாக்கு

ஞாயிற்றுக்கிழமை, 10 செப்டம்பர் 2017      இந்தியா
Image Unavailable

ஆமதாபாத் : குஜராத்தில் இடஒதுக்கீடு கோரி நடத்தப்படும் போராட்டம் அரசியல் ஆதாயத்திற்காக பெறுவதற்காக காங்கிரசார் தூண்டுதலின் பேரில்  நடத்தும் போராட்டம் என்றும் அமீத்ஷா கடுமையாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

குஜராத் மாநிலத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இந்தநிலையில் அந்தமாநிலத்தில் ஹர்திக் படேல் தலைமையில் இதர பிற்பட்டோர் வகுப்பை சேர்ந்தவர்களுக்கு பததீர் வகுப்பினர்களுக்கு இடஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்துகின்றனர். இதுகுறித்து நேற்று ஆமதாபாத் நகருக்கு வந்த பாரதிய ஜனதா தலைவர் அமீத்ஷா,ஆமதாபாத் நகரில் நடந்த உறுதியான குஜராத் என்ற தலைப்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இளைஞர்களிடத்தில் உரையாடினார். அப்போது குஜராத்தில் இடஒதுக்கீடு கோரி போராட்டம் நடந்துவருவது குறித்து கேள்வி கேட்டனர். அதற்கு பதில் அளித்த அமீத்ஷா, சட்டப்படி நடந்துகொள்ளும்படி போராட்டக்காரர்களை கேட்டுக்கொண்டோம். ஆனால் தற்போது போராட்டம் வேறுதிசையில் செல்கிறது என்றார்.

போராட்டத்தை உன்னிப்பாக நீங்கள் கவனியுங்கள். இந்த போராட்டமானது சிறிது சிறிதாக ஒரு அரசியல் கட்சியின் [காங்கிரஸ்] ஆதரவுடன் நடக்கிறது என்பது தெரியும் என்றும் அமீத்ஷா கூறினார். இடஒதுக்கீட்டை பெறுவதற்கு சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள் என்று போராட்டக்காரர்களை கேட்டுக்கொண்டோம். பதிதார்களின் போராட்டத்தின் முக்கிய நோக்கம் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு பெறுவதுதான். அதற்காக அவர்கள் இதர பிற்படுத்தப்பட்டோர் கமிஷனில் முதலில் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அமீத்ஷா மேலும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து