முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லல்லு உள்ளிட்ட 3 முன்னாள் முதல்வர்களின் இசட் பிளஸ் பாதுகாப்பு ரத்தாகிறது

சனிக்கிழமை, 16 செப்டம்பர் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : தி.மு.க தலைவரும் தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதி உள்ளிட்ட 3 முன்னாள் முதல்வர்களின் இசட் பிளஸ் பாதுகாப்பை விலக்கிக் கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
நாடு முழுவதும் என்.எஸ்.ஜி. எனப்படும் கமாண்டோ படை பாதுகாப்பு மொத்தம் 15 அரசியல் தலைவர்களுக்கு வழங்கப்படுகிறது. இதில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், முன்னாள் துணை பிரதமர் அத்வானியும் அடங்குவர்.

இந்த தலைவர்களுக்கு குண்டு துளைக்காத வாகனம், 2 பாதுகாப்பு வாகனங்கள், 40 பாதுகாப்பு கமாண்டோ படை வீரர்கள் பாதுகாப்பு அளிப்பர். இதேபோல் இசட் பிளஸ், இசட், ஒய் மற்றும் எக்ஸ் என பல பிரிவுகளில் தலைவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் பாதுகாப்பு வழங்கப்படும் தலைவர்கள் எண்ணிக்கையை குறைக்குமாறு மத்திய அரசிடம் கமாண்டோ படைப் பிரிவினர் மத்திய அரசிடம் கேட்டுக் கொண்டனர்.

இது குறித்து ஆலோசித்த உள்துறை அமைச்சகம் தி.மு.க தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி, உபி முதல்வர் அகிலேஷ் யாதவ், அஸ்ஸாம் மற்றும் பீகார் முன்னாள் முதல்வர்கள் தருண்கோகய், லல்லு பிரசாத் யாதவ் ஆகியோருக்கான இசட் பிளஸ் பாதுகாப்பை விலக்க முடிவு செய்தது. இதற்கு உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து