முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் 21-ம் தேதி காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம்

செவ்வாய்க்கிழமை, 14 மே 2024      இந்தியா
Cauvery 2023 08 11

Source: provided

புதுடெல்லி : காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் வரும் 21-ம் தேதி டெல்லியில் கூடுகிறது.

காவிரி நீர் முறைப்படுத்தும் ஒழுங்காற்று குழுவின் 95-வது கூட்டம் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் டெல்லியில் கடந்த ஏப்ரல் 30-ம் தேதி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுவை ஆகிய மாநிலங்களின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 

இதில் தமிழக அரசின் உறுப்பினர் எம்.சுப்பிரமணியன் (தலைமைப் பொறியாளர், திருச்சி மண்டலம் மற்றும் தலைவர், காவிரி தொழில்நுட்ப குழுமம் மற்றும் பன்மாநில நதிநீர்ப் பிரிவு) கலந்து கொண்டனர். காவிரியில் இருந்து சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி 95 டி.எம்.சி நிலுவை நீரை வழங்க வேண்டும் என தமிழக அதிகாரிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

இதையடுத்து மே மாதத்திற்கு தர வேண்டிய 25 டி.எம்.சி தண்ணீரை தமிழகத்திற்கு  திறந்து விட வேண்டும் என்று கர்நாடகா அரசுக்கு, ஒழுங்காற்று குழு உத்தரவிட்டிருந்தது. இது போன்ற சூழலில் வரும் 21-ம் தேதி காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம், அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் டெல்லியில் கூடுகிறது. 

இதையடுத்து அப்போது நீர் பங்கீடு குறித்து ஒழுங்காற்று குழு தாக்கல் செய்திருந்த அறிக்கையின் அடிப்படையில் ஆலோசனைகள் நடத்தப்பட உள்ளது. மேலும் இந்த கூட்டத்தில் நிலுவை நீர் அனைத்தையும் உடனடியாக திறந்து விடக் கோரி கர்நாடகா அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று ஆணையத்தின் தலைவர் முன்னிலையில் தமிழக அரசு வலியுறுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து