முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் பங்கேற்க வைகோ ஜெனீவா பயணம்

ஞாயிற்றுக்கிழமை, 17 செப்டம்பர் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை :  ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டத்தில் பங்கேற்க ம.தி.மு.க பொதுச்செயலர் வைகோ ஜெனீவா பயணம் மேற்கொண்டுள்ளார்.

சுவிஸ்லாந்து நாட்டில் ஜெனீவா நகரில்   ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் 2009-ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தில் மனித உரிமைகள் மீறப்பட்டது தொடர்பான ஐ.நா. குழுவின் முழுமையான அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது

இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஏற்கனவே இலங்கையில் இருந்து தமிழர் பிரதிநிதிகள் ஜெனீவா சென்றுள்ளனர். இந்த நிலையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் ஜெனீவா பயணம் மேற்கொண்டுள்ளார்.தமிழகத்தில் இருந்து திரைப்பட இயக்குநர் கவுதமனும் ஜெனீவாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து