முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகின் 2வது மிகப்பெரிய சர்தார் சரோவர் அணையை குஜராத்தில் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்

ஞாயிற்றுக்கிழமை, 17 செப்டம்பர் 2017      இந்தியா
Image Unavailable

அகமதாபாத் : உலகின் 2வது பெரிய அணையும் ஆசியாவின் மிகப்பெரிய அணையுமான  சர்தார் சரோவர்  அணையை பிரதமர் மோடி தனது 67வது பிறந்த நாளான நேற்று திறந்து வைத்தார். இந்த அணை குஜராத்தில்  நர்மதா ஆற்றின் குறுக் கே கட்டப்பட்டுள்ள து.அணையின் மூலமாக குஜராத், ராஜஸ்தான் மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் பயன் பெறும். இந்த பிரமாண்ட விழாவில் மத்திய  அமைச்சர் அமைச்சர் நிதின் கட்காரிமற்றும் குஜராத்மாநில முதல்வர் விஜயரூபானி ஆகியோர் கலந்து கொண்டனர்.

குஜராத்தில் உள்ள  நர்மதா ஆற்றின் குறுக்கே உலகின் இரண்டாவது பெரிய அணையும் ஆசியாவின் மிகப்பெரிய அணையும் கட்டப்பட்டுள்ளது. இந்த அணையை பிரதமர் மோடி  நேற்று திறந்து வைத்தார், பிரதமர் மோடிக்கு நேற்று 67வது பிறந்த நாள் ஆகும். தனது பிறந்த தினத்தன்று அவர் இந்த அணையை திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். அணை திறப்பு விழாவிற்கு முன்னதாக உரிய பூஜைகள் நடத்தப்பட்டன. நர்மதா மாவட்டம் கேவடியாவில் அணை அமைந்துள்ளது.,

இந்த மகா அணை குஜராத்தின் உயிர் நாடி என பா.ஜ,.க தலைவர்கள் புகழ்ந்தனர். சரவோர் அணைக்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த 1961ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5ம் தேதியன்று நடைபெற்றது.56 ஆண்டுகளுக்குப்பின்னர் அணை கட்டப்பட்டு தற்போது திறக்கப்பட்டுள்ளது. இந்த அணைக்கான அடிக்கல்லை நாட்டின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு நாட்டினார்.

குஜராத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. இந்த நிலையில் பிரதமர் மோடி தனது சொந்த மாநிலமான குஜராத்திற்கு வந்திருப்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. ஒரு வார காலத்திற்குள் இரண்டாவது முறையாக அவர் குஜராத்திற்கு வந்தார். அதி வேக புல்லட் ரயில் திட்டத்தை துவக்கி வைக்க ஜப்பான் பிரதமர் சின்சோ அபேவுடன் பிரதமர் மோடி வந்திருந்தார். அந்த பயணத்தை தொடர்ந்து உடனடியாக தற்போது அவர் அணை திறப்பு விழாவிற்கு வந்துள்ளார்.

சரவோர் அணை கட்டுமானம் பல்வேறு காரணங்களால் தாமதமாகி இருந்தது. தற்போது அந்த தடைகள் நீங்கி அணை திறக்கப்பட்டுள்ளது. சரவோர் அணை உயரம் சமீபத்தில் 138.68மீட்டராக   உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் அணையில் 4.73மில்லியன்(1 மில்லியன் =10லட்சம்) ஏக்கர் அடி தண்ணீர் தேக்க முடியும். இந்த  அணை நீரால் குஜராத், மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் பயன் பெறும்.

இந்த அணை மூலம் 10லட்சம் விவசாயிகள் பாசன வசதி பெறுவதுடன்,4கோடி மக்களும் குடி நீர் வசதியை பெற முடியும்.  இந்த அணை நீர் மூலமாக ஆண்டுக்கு 10லட்சம் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். நீர் போக்குவரத்திற்கான மனிதனின் மிகப்பெரிய சாதனை இந்த அணை கட்டுமானம் என்றும் பாராட்டப்படுகிறது.

இந்தியாவிலேயே மிகப் பிரமாண்ட அணையான இந்த அணை பல்வேறு கோர்ட் வழக்குகள் காரணமாக பல ஆண்டுகள் கட்டி முடிக்கப்படாமல்  தாமதமாகி வந்தது. சர்தார் சரோவர் என்ற பெயர் சூட்டப்பட்ட இந்த அணையின் மொத்த நீளம்1.2 கிலோ மீட்டர் ஆகும். இந்த அணையில் 30 நுழைவு நீர்  திறப்புகள் உள்ளன. இந்த அனைத்து திறப்புகளையும் மூடவே ஒரு மணி நேரம் ஆகும். அந்த அளவிற்கு அணை மிகப்பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது., சர்தார் சரோவர் அணை நீரால் குஜராத்தின் பாதி கிராமங்கள் குடி நீர் வசதியை பெற முடியும், இந்த அணை நீர் குஜராத்தின் 75 ஆயிரம்  கி.மீ தூரம் கால்வாய்களில் செல்லவுள்ளது., அப்போது குஜராத்தில் உள்ள மொத்த 18ஆயிரத்து 144 கிராமங்களில் 9ஆயிரத்து490 கிராமங்கள் குடி நீர் வசதியைப்பெறும். வேறு எந்த மாநிலத்திலும் இது போன்ற பிரமாண்ட அணையில் அளிக்கப்படும் குடி நீர் வசதி போல அளிக்கப்படுவது இல்லை. பாசன வசதி, குடி நீர் தவிர மின் உற்பத்தியிலும்  அணை நீர் பிரதானமாக உள்ளது. இந்த அணையின் நீர் மின் திட்டத்தால்  தினமும் 1450 கெமாவாட் மின் சாரம் உற்பத்தி செய்யப்படும். இந்த மின் சாரத்தை குஜராத், மத்திய பிரதேசம்,  மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் பங்கிட்டு கொள்கின்றன. இந்த அணை நீரால் குஜராத்தில் விவசாய உற்பத்தியும், விவசாயிகளின் வருமானமும் அதிகரிக்கும்.

உலகின் மிகப்பெரும் அணையின் பெரும் பாலான கட்டுமானப்பணிகள் காங்கிரஸ் ஆட்சி காலத்தில்தான் நடைபெற்றது என காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித்தொடர்பாளர் சக்தி சிங் கோகில் மற்றும் குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் பாரத் சிங் சோலங்கி கூறினார்கள். சர்தார் சரவோர் அணை திறப்பு விழாவிற்கு பின்னர் பிரதமர் மோடி தபோய் நகரில் நடந்த விழா ஒன்றில் கலந்து கொண்டார்.   அப்போது அவர் பேசியதாவது,

சரோவர் அணை இந்தியாவின் புதிய மற்றும் வளர்ச்சி பெற்று வரும் சக்தியின் அடையாளம் . இந்த அணையினால் இந்த பிராந்தியம் முழுவதும் பெரும் வளர்ச்சி பெறும். இந்த அணை கட்டுமானம் மிகப்பெரும் பெரிய பொறியியல்  அதிசயம் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து