முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பலுசிஸ்தானில் மனித உரிமைகள் மீறல் பாகிஸ்தானுக்கு ஐ.நா. சபை கண்டனம்

செவ்வாய்க்கிழமை, 19 செப்டம்பர் 2017      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத்: பலுசிஸ்தானில் மனித உரிமைகள் மீறப்பட்டு வருவதாக ஐ.நா. சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான், ஈரான், ஆப்கானிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள பலுசிஸ்தான் பகுதியை ‘கான் ஆப் கலாட்’ மன்னர் பரம்பரை ஆட்சி செய்து வந்தது. அந்தப் பகுதியை ஆங்கிலேயர்கள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர்.

கடந்த 1947-ல் இந்தியாவும் பாகிஸ்தானும் சுதந்திரம் அடைந்தபோது பலுசிஸ்தான் தனிநாடாக உருவெடுத்தது. ஆனால் 1948-ல் பலுசிஸ்தானை பாகிஸ்தான் ராணுவம் ஆக்கிரமித்தது. அன்று முதல் இன்றுவரை பலுசிஸ்தானில் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அங்கு பெரும்பான்மையாக வாழும் பலுச் இன மக்களை ராணுவம் படுகொலை செய்து வருகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக ஜெனீவாவில் உள்ள ஐ.நா. அலுவலகத்தில் ‘பலுசிஸ்தான் ரத்தம் வடிக்கிறது’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெறுகிறது. இதில் ஐ.நா. சபை பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்று பாகிஸ்தானின் மனித உரிமை மீறல்களை கடுமையாக கண்டித்து வருகின்றனர். அந்த வரிசையில் போலந்து நாட்டு எம்.பி. ஜேசக் நேற்று கருத்தரங்கில் பேசினார்.அவர் கூறியதாவது:

பலுசிஸ்தானில் பாகிஸ்தான் ராணுவம் அப்பட்டமாக மனித உரிமைகளை மீறி வருகிறது. ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர். கடந்த சில ஆண்டுகளில் 1,020 பேரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ராணுவத்தின் படுகொலைகளால் பலுசிஸ்தானில் பெரும்பான்மையாக வசிக்கும் பலுச் இன மக்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. பலர் வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர். இந்தப் பிரச்சினையில் சர்வதேச நாடுகள் தலையிட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

பாகிஸ்தான் ஆட்சியில் இருந்து பலுசிஸ்தானை விடுதலை செய்ய வேண்டும் என்று ஜெனீவாவின் பல்வேறு பகுதிகளில் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. பலூச் இன அமைப்புகள் ஜெனீவாவில் பேரணியும் நடத்தி வருகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து