முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்ரீவில்லி. கலசலிங்கம் பல்கலையில் இந்தியதரவட்ட அமைப்பு கருத்தரங்கு!

புதன்கிழமை, 20 செப்டம்பர் 2017      விருதுநகர்
Image Unavailable

 விருதுநகர். -ஸ்ரீவி.  கலசலிங்கம் பல்கலையில்,  இந்திய  தரவட்ட  அமைப்பு,  மதுரை கிளையின்  27வது  2நாள்   கருத்தரங்கு,  கலசலிங்கம்  பல்கலைக்கழகத்துடன்  இணைந்து   நடைபெற்றது.
கருத்தரங்கை கலசலிங்கம் பல்கலை துணைத்தலைவர்  எஸ். அர்ஜூன்கலசலிங்கம்  கலந்துகொண்டு   துவக்கிவைத்தார். 
கியூ சி எப் ஐ   மதுரை கிளையின்  துணை தலைவர் தினேஷ்  டேவிட்சன் தலைமை தாங்கினார்.  பல்கலைக்கழக  துணைவேந்தர் முனைவர் எஸ். சரவணசங்கர் மற்றும்  பதிவாளர் முனைவர் வெ. வாசுதேவன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
பல்கலை வாய்பேசாத காதுகேளாத பி. டெக்  துறை இயக்குநர் முனைவர் சக்திவேல் ராணி வரவேற்புரையாற்றி விழா ஏற்பாடுகளை  சிறப்பாக செய்திருந்தார்.
கியூ சி எப் ஐ    இயக்குநர்  பி.  பாலகிருஷ்ணன்,  கியூ சி எப் ஐ    மற்றும்  மதுரை கிளையின்  செயல்பாடுகளை  விளக்கினார்.  சுகுமாரன் கருத்தரங்கம்  பற்றி விவரித்தார்.    கியூ சி எப் ஐ     மதுரை  கிளையின்  துணை செயலாளர், ஜே.  சிவகுமார், மற்றும்    மதுரை  கிளையை  நிறுவிய  தலைவர்  ஜி.  சுப்பிரமணியன், ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
இந்த கருத்தரங்கில்  டெக்ஸ்டைல்,  சிமெண்ட்,  ரப்பர்,  மருத்துவம்,  பொறியியல்சார்  50 நிறுவனங்களிலிருந்து 150  தரவட்ட  குழுக்கள்  பங்கேற்றன.   மொத்தம்  800 நிறுவன அதிகாரிகள்   பங்கேற்றனர்.   ஓவ்வொரு   குழுவும்  தங்கள் நிறுவனத்தில்  தாங்கள் தேர்ந்தெடுத்து தீர்த்த  பிரச்சனை மற்றும் அதை அமல்படுத்தியதால் அடைந்த  பலன்கள்  பற்றிய  விளக்க விவரம்  அளித்தார்கள்;..

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து