முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் தமிழக அரசின் நலத்திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம்

வெள்ளிக்கிழமை, 22 செப்டம்பர் 2017      தேனி
Image Unavailable

தேனி.-தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் சிறுபான்மையின மக்களுக்கான தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் நலத்திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் இன்று (21.09.2017) சிறுபான்மையினர் நலத்துறை இயக்குநர் முனைவர்.மா.வள்ளலார், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர்  ந.வெங்கடாசலம்,   முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் விலையில்லா தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் 1 பயனாளிக்கு ரூ.3,386ஃ- தையல் இயந்திரத்தினையும், 1 பயானிளக்கு மாதாந்திர உதவித்தொகை;கான ஆணையினை சிறுபான்மையினர் நலத்துறை இயக்குநர் முனைவர்.மா.வள்ளலார்,   வழங்கினார்.
  இக்கூட்டத்தில், சிறுபான்மையின மக்களுக்காக தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழக(டாம்கோ)த்தின் மூலம் வழங்கப்பட்ட சுய உதவிக்குழுக்கள்; கடனுதவி, தனிபர் கடனுதவி, கல்விக்கடனுதவிகள் குறித்தும்,  பள்ளி மற்றும் தொழில் கல்வி பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்பட்ட கல்வி உதவித்தொகை, மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மாணவ, மாணவியர்களின் சிறுபான்மையினர் நல 6 விடுதிகளின் செயல்பாடுகள் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தின் மூலம் வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகள், முஸ்லீம் மகளிர் உதவும் சங்க செயல்பாடுகள் குறித்தும் சிறுபான்மையினர் நலத்துறை இயக்குநர்  வள்ளலார், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர்  ந.வெங்கடாசலம்,  முன்னிலையில் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
  கூட்டத்தில், சிறுபான்மையினர் நலத்துறை இயக்குநர் அவர்கள் தெரிவிக்கையில், தமிழக அரசு சிறுபான்மையினர் மக்களின் கல்வி, சமூகம், மற்றும் பொருளாதார நிலைகளை பெரும்பான்மையினருக்கு நிகராக மேம்பாடு செய்திடும் நோக்கத்திலும், அவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்திட பல்வேறு அரசின் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதனடிப்படையில், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகத்தின் (டாம்கோ) சார்பில் தனிநபர் கடன் திட்டம், சுயஉதவிக்குழுக்களுக்கான கடன் திட்டம், கல்வி கடன் போன்ற பல்வேறு கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. கல்வி கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் சிறுபான்மையின மாணவ, மாணவியர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை, முதுகலை, தொழற்கல்வி, தொழில்நுட்பக்கல்வி மற்றும் குறுகிய கால உயர்திறன் வளர்ச்சி படிப்பு பயில்பவர்களுக்கு கல்வி கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது.  அரசு மற்றும் அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கல்வி நிறுவனங்களில் பயிலும் சிறுபான்மையின  மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
  சிறுபான்மையின மாணவ, மாணவியர்களுக்கு விடுதிகளில் தங்கி பயிலுவதற்கு ஏதுவாக மாவட்டத்தில் 6 விடுதிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் சமூக, பொருளாதார  நிலைகளில் மேம்பாடு அடைவதற்கென உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. சமுதாயத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள சிறுபான்மை சமுதாயத்தைச் சார்ந்த பெண்களுக்க முஸ்லீம் மகளிர் உதவு சங்கம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நமது மாவட்டத்தில் சிறுபான்மையின இளைஞர்களுக்கு கணினி, கைபேசி போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டு அவர்களுக்கு கடனுதவி வழங்கிட வேணடும். சிறுபான்மையின மக்கள்; வசிக்கின்ற பகுதிகளில் அடிப்படை வசதிகளை செய்திட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். சிறுபான்மையின விவசாயிகள் விவசாய பொருட்களை விளை பொருட்களாக மாற்றி இதன்மூலம் அதிக வருவாயை ஈட்டிட வேண்டும். எனவே, சிறுபான்மையின மக்களுக்காக அரசின் நலத்திட்டத்திட்டங்கள் அவர்களை சென்றடைய துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும் என சிறுபான்மையினர் நலத்துறை இயக்குநர் முனைவர்.மா.வள்ளலார்  தெரிவித்தார்.
 கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர்  தி.செ.பொன்னம்மாள்   மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர்  வடிவேல்   கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர்  முத்துகுமாரசுவாமி   உயர் கல்வித்துறை இணை இயக்குநர்  கூடலிங்கம்   மகளிர் திட்ட அலுவலர்  கல்யாண சுந்தரம்   பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர்  தி.இரா.ஆனந்தி   உதவி இயக்குநர் (ஊராட்சிகள்)  தி.அபிதாஹனீப்   மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்  ரகுபதி   மதுரை மத்திய கூட்டுறவு வங்கி பொது மேலாளர்  செந்தில்குமார்   செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்  ச.தங்கவேல்   ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர்  தி.இராஜராஜேஸ்வரி   மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர்  வைத்தியலிங்கம்   நபார்டு வங்கி உதவி பொது மேலாளர்  வெங்கடரமணா   மாவட்ட முஸ்லீம் மகளிர் உதவும் சங்க கௌரவ செயலாளர்  பொன்ராஜ் கொந்தாளம் அவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து