முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கப் பதக்கம் வென்ற மாற்றுத்திறனாளி வீரருக்கு பாராட்டுவிழா:

திங்கட்கிழமை, 25 செப்டம்பர் 2017      சிவகங்கை
Image Unavailable

காரைக்குடி- காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பாரா விளையாட்டு பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற வீரர் யு.செல்வராஜ் கனடா நாட்டின் டோராண்டோ மாநகரில் நடைபெற்ற உயரம் குன்றியவர்களுக்கான 7வது உலக தடகள போட்டியில் பங்கேற்று ஈட்டி எறிதல் பிரிவில் 26.54 மீட்டர் தூரம் எறிந்து முதலிடம் பெற்று தங்கப் பதக்கத்தை வென்று அழகப்பா பல்கலைக்கழகத்திற்கு பெருமை சேர்த்த இவருக்கு அழகப்பா பல்கலைக்கழக ஆசிரியர், அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் சார்பில் பாராட்டு விழா  பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் நடைபெற்றது.
அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பேரா. சொ.சுப்பையா அவர்கள் இந்நிகழ்ச்சிக்கு தலைமையேற்று உரை நிகழ்த்துகையில் கிராமத்தில் பிறந்த செல்வராஜ் உயரத்தில்; குறைவானவராக இருந்தாலும் சாதனையில் உயர்ந்து நிற்கின்றார். இவர் உலகளவில் சாதனை படைப்பதற்கு அழகப்பா பல்கலைக்கழகம் அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ளது. ஒலிம்பிக் போட்டியில் பதக்கங்கள் வெல்ல வேண்டும் என்ற குறிக்கோளை அடிப்படையாக கொண்டே அழகப்பா பல்கலைக்கழக பாரா மையம் தோற்றுவிக்கப்பெற்றது. இம்மையத்தில் பயிற்சி பெற்ற செல்வராஜ் அந்த குறிக்கோளை நிறைவேற்றியுள்ளார். இந்த மையத்தில் மொத்தம் 45 தடகள வீரர்கள் பயிற்சி பெற்று வருகிறார்கள். இவர்கள் அனைவரும் வருங்காலங்களில் நடைபெற விருக்கும் பாராலிம்பிக் போட்டிகளில் பதக்கம் பெறக்கூடிய திறமை உடையவர்களாக இருக்கிறார்கள். ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் இவருக்கும் இவரைப் போன்ற மாற்றுத்திறனாளி வீரர்களுக்கும் உதவி செய்து ஊக்கப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
மதுரை தென்னக இரயில்வே தலைமை முன்பதிவு அதிகாரி ஆசியன் தங்கப் பதக்கம் பெற்ற திருமதி உ.பாண்டீஸ்வரி தமது வாழ்த்துரையில் விளையாட்டுத் துறை தான் என்னை உங்களிடம் அடையாளம் காண்பித்தது. காசநோயால் பாதிக்கப்பட்டு இருந்த நான் என் தந்தையின் பெரும் முயற்சியோடு தினசரி மிதிவண்டி ஓட்டியதாலும்; ஓட்டப்பயிற்சி மேற்கொண்டதாலும்; எனது நோய் முழுவதுமாக நீங்கியது. நான் தேசிய அளவில் சாதனை நிகழ்த்த முடிந்தது. அந்த சாதனையை இன்று வரை யாராலும் முறியடிக்க முடியவில்லை. உண்மையாக உழைத்தால் உயர்வு நிச்சயம். மண்ணை நேசித்தவர்கள் எப்போதும் வீணாவதில்லை. எல்லோரிடமும் நிச்சயமாக ஒரு திறமை இருக்கும் அவற்றை தெரிந்து நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மாணவர்களாகிய நீங்கள் சமூக வலைதளங்களை விட்டு வெளிவரவேண்டும். உலகில் தமிழர்கள் இல்லாத இடமே இல்லை. அவர்களால் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை. விளையாட்டு படிப்பு திறமை எல்லாம் நிறைவாக இருக்கிறது. நாம் இவற்றை பயன்படுத்தி உயர வேண்டும்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் மு.மீனா தமது சிறப்புரையில் கல்வி, கலை, விளையாட்டு இந்த மூன்றிலும் சிறந்து விளங்குபவர்கள் வாழ்க்கையில் சாதனையாளர்களாக உருவாக முடியும். அழகப்பா பல்கலைக்கழக பாரா மைய வீரர் செல்வராஜ் உலகளவில் நடைபெற்ற பாரா விளையாட்டு தடகள போட்டியில் ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கம் வென்று அழகப்பா பல்கலைக்கழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். அவருக்கு நடத்தப்பெறும் இந்த பாராட்டு விழா வரலாற்று சிறப்பு மிக்க விழாவாகும் என்றார். ஒவ்வொரு பெற்றோரும் தங்களுடைய பிள்ளைகள் தரமான கல்வி பெற வேண்டும் என்பதற்காக எத்தகைய தியாகத்தையும் செய்யத் தயராக இருக்கிறார்கள். படிப்போடு குழந்தைகளுக்கு உடற்பயிற்சியும் அவசியம். இன்றைய சூழ்நிலையில் நவீன தொழில் நுட்ப வளர்ச்சி சாதனங்களை மாணவர்கள் பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல் உடற்பயிற்சியையும் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு உடற்பயிற்சி எடுத்துக்கொண்டால் நம்மை எந்த நோயும் அணுகாது என்று கூறினார்.
இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழக ஆசிரியர்கள்; சார்பாக முனைவர் சு.இராசாராம் வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவ மாணவியர் கலந்து கொண்டனர். முன்னதாக பல்கலைக்கழக ஆராய்ச்சி முதன்;மையர் முனைவர் த.ரா. குருமூர்த்தி அவர்கள் அனைவரையும் வரவேற்றார். அழகப்பா உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் முனைவர் எம்.சுந்தர் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து