முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமங்கலம் அருகே துணைக்கோள் நகரம் அமைத்திட பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்ற நிலஆர்ஜித பணிகள்:

புதன்கிழமை, 27 செப்டம்பர் 2017      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள உச்சப்பட்டி-தோப்பூர் துணைக்கோள் நகரம் அமைத்திடுவதற்காக இறுதிகட்ட நிலஆர்ஜித பணிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது.அப்போது எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய நிலஉரிமையாளர்கள் 10பேர் கைது செய்யப்பட்டனர்.
கடந்த 04.04.2013-ம் நாளன்று மறைந்த தமிழக முதல்வர் அம்மா அவர்களால் தமிழக சட்டப்பேரவையில் 110வது விதியின்கீழ் திருமங்கலம் அருகேயுள்ள உச்சப்பட்டி-தோப்பூர் கிராமங்களில் மாபெரும் துணைக்கோள் நகரம் அமைக்கப்படும் என அறிவித்திருந்தார். இதையடுத்து இந்த துணைக்கோள் நகரமானது உச்சப்பட்டி கிராமத்தில் 521.26ஏக்கர் மற்றும் தோப்பூர் கிராமத்தில் 52.57ஏக்கர் என 573.83ஏக்கர் பரப்பளவில் உருவாகி வருகிறது.தற்போது கழிவுநீர் கால்வாய்கள்,குடிநீர்குழாய்வசதி மற்றும் சாலைவசதிகள் இந்த துணைக்கோள் நகரத்தில் செய்து தரப்பட்டுள்ளது. இதனிடையே உச்சப்பட்டி கிராமத்தில் மகேந்திரன்,சுரேந்திரன்,ரவீந்திரன் மற்றும் ராமநாதன் ஆகியோருக்கு சொந்தமான 69.54ஏக்கர் நிலம் கடந்த 1994ம் ஆண்டிலே நிலஎடுப்பு சட்டத்தின் கீழ் ஆர்ஜிதம் செய்யப் பட்டிருந்தது.மேற்படி நிலங்கள் ஆர்ஜிதம் செய்யப்பட்டதை எதிர்த்து நிலத்தின் உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு வழக்கின் தீர்ப்பு தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்திற்கு சாதகமாக வந்தது.இதையடுத்து சென்னை உயர்நீதிமன்ற கிளையில் நிலஉரிமையாளர்களால் தாக்கல் செய்யப்பட்ட இரு சீராய்வுமனுக்கள் 29.06.2017அன்று தள்ளுபடி செய்யப்பட்டு வீட்டுவசதி வாரியத்திற்கு சாதகமான தீர்ப்பு கிடைத்தது.இவ்வாறாக மேற்படி நிலத்தின் உரிமையாளர்கள் பலவிதமான வழக்குகளை தொடர்ந்தும் அனைத்து வழக்குகளும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சாதகமான முறையில் அனுமதிக்கப்பட்டது.
இந்நிலையில் நீதிமன்ற உத்தரவின்படி மேற்படி நிலங்களை போலீஸ்பாதுகாப்புடன் ஆர்ஜிதம் செய்து அதிலுள்ள நிலத்தை பொருளாதாரத்தில் மிகவும் நலிவடைந்த பிரிவினருக்கு 4449மனைகள் அமைத்து கொடுத்திடும் நலத்திட்டத்திற்காக தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் வசம் ஒப்படைத்திட அதிகாரிகள் திட்டமிட்டனர். அதன்படி நேற்று காலை உச்சப்பட்டியில் கையகப்படுத்தப் பட்டிருந்த 69.54ஏக்கர் நிலத்தில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றிடும் பணிகள் நேற்று உசிலம்பட்டி கோட்டாட்சியர் சுகன்யா முன்னிலையில் 300க்கும் மேற்பட்ட அதிரடிப்படை போலீசார் பாதுகாப்புடன் நடைபெற்றது. அப்போது 10பொக்லைன் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு ஆர்ஜிதம் செய்யப்பட்ட நிலத்தில் ஆக்கிரமித்திருந்த 2500வாழை மரங்கள்,100தென்னை மரங்கள்,கிணற்றுடன் கூடிய பம்புசெட் அறை மற்றும் மானாவாரி பயிர்கள் என ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றி தரைமட்டமாக்கப்பட்டது.தமிழ்நாடு வீட்டுவதிவாரிய அதிகாரிகள் மற்றும் போலீசாரின் இந்த அதிரடி நிலஆர்ஜித நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நிலஉரிமையாளர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்களும் ஆக்கிரமிப்பு அகற்றிடும் பணிகளை தடுத்து நிறுத்திட போராட்டம் நடத்தினார்கள்.
அப்போது பணிகளை செய்யவிடாமல் தடுத்த 10க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து தனக்கன்குளத்திலுள்ள தனியார் திருமணமஹாலில் தங்கவைத்தனர்.மேலும் போராட்டம் என்ற பெயரில் உயர்மின்அழுத்த மின்கோபுரத்தில் யாரும் ஏறிடாத வகையில் அப்பகுதியிலிருந்த ஒவ்வொரு மின்கோபுரத்தைச் சுற்றிலும் ஏராளமான போலீசார் பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டிருந்தனர்.இந்த பணிகளில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய உச்சப்பட்டி-தோப்பூர் துணைக்கோள் நகர் திட்ட மேற்பார்வை பொறியாளர் தியாகராஜன்,செயற்பொறியாளர் குணசேகரன்,திருமங்கலம் வட்டாட்சியர் நாகரத்தினம் மற்றும் அதிகாரிகள் மேற்கொண்டனர்.அவர்களுக்கு பாதுகாப்பாக மதுரை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் நரசிம்மவர்மன்,டி.எஸ்.பிக்கள் திருமால்அழகு,ராமகிருஷ்ணன், திருமங்கலம் தீயணைப்பு நிலைய அதிகாரி அரிராமன் மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.இதனால் அந்த பகுதி முழுவதிலும் பரபரப்பாக காணப்பட்டது.
படங்கள் நெட்டில் உள்ளது.... படவிளக்கம்: திருமங்கலம் அருகே உச்சப்பட்டி-தோப்பூர் துணைக்கோள் நகரம் அமைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நிலஆர்ஜித நடவடிக்கையின் போது ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட காட்சிகள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து